உலகம்

உயிருடன் இருப்பதை நிருபிக்க போராடும் நெதன்யாகு ; ஏ.ஐ. பதிலால் வெடித்த பூகம்பம்!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மரணம் குறித்த வதந்திகளை அகற்ற ஒரு காபி கடையில் இருந்து பகிர்ந்த புதிய வீடியோவை எக்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக், “இந்த வீடியோ ஏ.ஐ-ஆல் உருவாக்கப்பட்டது” என்று கூறியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிய தாக்குதலில் பெஞ்சமின் நெதன்யாகு இறந்ததாக இணையத்தில் பரவிய செய்திகளுக்குப் பிறகு இந்த வீடியோ பகிரப்பட்டது.

வீடியோவில், நெதன்யாகு தனது மரணம் குறித்த செய்திகளை கேலி செய்து, “நான் காபிக்கு இறந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், அந்த வீடியோ உண்மையானது அல்ல என்றும், ஏ.ஐ.-ஆல் உருவாக்கப்பட்ட டீப்-ஃபேக் வீடியோ என்று க்ரோக் கூறியது.

இந்தக் கூற்று நெதன்யாகு இருக்கும் இடம் மற்றும் நல்வாழ்வு பற்றிய ஊகங்களை மேலும் வலுப்படுத்தியது. உண்மையில், க்ரோக் இதை ‘நையாண்டி’ வீடியோ என்று குறிப்பிட்டது. மேலும், வீடியோவில் இது போலியானது என்று சுட்டிக்காட்டும் பல நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டியது.

அதன்படி நிலையான காபி நிலை மற்றும் இயற்கைக்கு மாறான உதடு ஒத்திசைவு உள்ளிட்டவை இந்த காட்சி ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பதை குறிப்பதாக இருக்கிறது என க்ரோக் கூறியது.

எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட டீப்-ஃபேக் என்று பலர் கமென்ட் செய்தனர். க்ரோக் சொன்ன தகவலால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவுடன் அவர், “வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, இணைந்து வெற்றி பெறுவோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *