இந்தியா

தவெக தலைவர் முன்வைத்த முக்கிய கோரிக்கை!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு கட்ட சிபிஐ விசாரணையை எதிர் கொண்டிருந்த விஜய்,   3 ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் மீண்டும் சம்மன் அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்த கட்ட விசாரணைக்கு சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதியில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு, பரப்புரை என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், விசாரணைக்காக டெல்லி வந்து செல்வது சிரமம் என்றும் விஜய் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரூர் விவகாரத்தில் சிபிஐ நடத்திய மூன்று கட்ட விசாரணையிலும் சட்டத்திற்குப்பட்டு, தான் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *