இலங்கை

அமெரிக்காவிடம் கேள்வி கேட்க இலங்கைக்கு முழு உரிமையுண்டு; இந்தியாவில் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் ஈரான் கடற்படைக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சட்டவிரோதமானது இது குறித்து அமெரிக்காவிடம் கேள்வி கேட்க இலங்கைக்கு முழு உரிமை உண்டு என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த நாமல் ராஜபக்ச மேலும் கூறுகையில்,

இலங்கையின் காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரான் கடற்படைக் கப்பல் அமெரிக்காவால் இலக்கு வைக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு முரணானது

குறித்த தாக்குதல் இலங்கையின் கடல் எல்லைக்கு மிக அண்மையில் நடந்துள்ளதால், பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் அமைதி குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை இலங்கைக்கு உள்ளது

இத்தகைய நடவடிக்கைகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியைச் சீர்குலைக்கும். இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *