பலதும் பத்தும்

சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

அல்ஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே குறைந்ததைத் தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள செம்மஞ்சள் நிற மணல் குன்றுகள் சிறிது நேரம் வெண்ணிறப் பனியால் மூடப்பட்டிருந்தன.

ஐன் செஃப்ரா (Aïn Séfra) நகருக்கு அருகிலேயே இந்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளதுடன், இது அங்கிருந்த குடியிருப்பாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நகரம் அட்லஸ் மலைத்தொடரின் அடிவாரத்திற்கு அருகில், சஹாராவின் வடக்கு விளிம்பில் அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது வீசும் குளிர்ந்த காற்றினால் பாலைவனத்தில் இவ்வாறான அரிய பனிப்பொழிவு ஏற்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் இப்பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்ட ஏழாவது சந்தர்ப்பம் இதுவென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டுக்கு முன்னர், ஐன் செஃப்ராவில் கடைசியாக 1979 ஆம் ஆண்டிலேயே பனிப்பொழிவு பதிவாகியிருந்தது.

இருப்பினும், இந்த பனி நீண்ட நேரம் நீடிக்காமல் விழுந்த சில நேரத்திலேயே உருகிவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *