உலகம்

லெபனான் , இஸ்ரேல் இடையே மோதல் தீவிரம் – மத்தியஸ்தம் செய்ய பிரான்ஸ் அழைப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை நடத்த தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.

பாரிஸ் (Paris) நகரில் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லெபனான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருடன் வெள்ளிக்கிழமை கலந்துரையாடியதாக கூறிய அவர் லெபனான் தலைவர்கள் இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளனர் எனவும் அ தெரிவித்தார்.

மேலும், இஸ்ரேல் தனது பாரியளவிலான தாக்குதல்களையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்றும், அதேவேளை ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பும் மோதலை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி நீடித்த தீர்வை காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், லெபனானின் இறையாண்மையை பாதுகாக்க அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்றும் மக்ரோன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *