உலகம்

பிரித்தானிய பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை

பிரித்தானிய பொருளாதாரம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எதிர்பாராத விதமாக வளர்ச்சியை அடையவில்லை என மாதாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சேவைத் துறை வளர்ச்சி காணாத நிலையில் உற்பத்தி துறை குறைந்தளவில் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து பெரிதாக உயரவில்லை.

அதாவது, ஆறு மாதங்களுக்கு பிறகும் ஜனவரி மாதத்தில் பொருளாதார நிலை அதே அளவிலேயே இருந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர அலுவலகமான Office for National Statistics வெளியிட்ட தரவுகளின்படி:

ஜனவரி மாதத்தில் பொருளாதார வளர்ச்சி 0% (மாற்றமில்லை)

பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தது 0.2% வளர்ச்சி

ஜனவரி வரை மூன்று மாதங்களில் வளர்ச்சி 0.2% மட்டுமே

இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காற்றும் சேவைத் துறை ஜனவரி மாதத்தில் எந்த வளர்ச்சியும் காணவில்லை.

எரிசக்தி விலைகள் அதிகரிப்பானது பணவீக்கத்தை அதிகரிக்கும் என்பதுடன், வட்டி விகிதக் குறைப்புக்கான நம்பிக்கைகளைத் தகர்க்கும் வாய்ப்புகளும் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளாவிய எரிசக்தி விலை உயர்வும், மத்திய கிழக்கு பதற்றங்களும் இதற்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதுடன், மத்திய கிழக்கு பதற்றங்கள் தொடர்ந்தால் பிரித்தானிய பொருளாதாரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை இது ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *