புலனாய்வு அதிகாரிகளை சிறையிடும் காலம் இதுவல்ல; முன்னாள் ஜனதிபதி மஹிந்த

புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் சேவைகளை மதிக்க வேண்டுமே தவிர சிறையில் அடைக்கக்கூடாது. அதற்கான காலம் இதுவல்ல என்று தெரிவித்த என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை தொடருமாக இருந்தால் இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹராம – அகுருகொட சிறி மங்கள விகாரையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
மகிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அவரின் பதில்களும் வருமாறு,
கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனம் தொடர்பில் வழங்கும் சேவைகளை எப்படி பார்க்கின்றீர்கள். உங்களுடைய காலத்தில் இந்த சேவை எப்படி இருந்தது?
பதில்: ஏதாவது சேவை இப்போது நடக்கின்றதா? எனது காலத்தில் உயரத்தில் இருந்தது. இப்போது அப்படி செய்யப்படுகின்றதா என்பது கேள்வியே.
கேள்வி: உங்களின் காலத்தில் இருந்த புலனாய்வு பிரிவு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் சேவைகளை மதிக்க வேண்டுமே தவிர சிறையில் அடைக்கக்கூடாது. அதற்கான காலம் இதுவல்ல.
கேள்வி: தற்போது சர்வதேசத்தல் யுத்தம் நடைபெறுகின்றது. இந்த யுத்தம் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலத்திற்கு என்னவாகும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: நாட்டுக்கு பிரச்சினை ஏற்படும். நாட்டின் எதிர்காலத்திற்கும் பாதிப்பு ஏற்படும்.
கேள்வி: நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில்: செய்வதை பார்த்தால் கூறுவதற்கு ஒன்றுமில்லை. என்னை விடவும் மக்களுக்கு இதுபற்றி நன்கு தெரியும்.
![]()