பலதும் பத்தும்
சிறுவர்களின் WhatsApp பயன்பாட்டை கண்காணிக்க பெற்றோர்களே புதிய வாய்ப்பு

சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் இணையப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் செயலியில் “Parent Controlled” என்ற புதிய வசதியை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது அவர்களது நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பு ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப மாறுபடலாம் என்றும், இந்த புதிய அப்டேட் (Update) விரைவில் படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் அமுலுக்கு வரும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் இணையப் பயன்பாட்டை முறைப்படுத்தவும், தேவையற்ற பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
![]()