பலதும் பத்தும்

டைட்டானிக் பட போஸில் எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் ; உலகளவில் வைரலாகும் சிலை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒரு சிலை நிறுவல் வாஷிங்டன், டிசி நகரில் வைக்கப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் விவகாரம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், எப்ஸ்டீனுடன் இருப்பதை போன்று வைக்கப்பட்டிருக்கும் சிலை, சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

பலரும் இந்த சிலையை வந்து பார்த்து, அதனுடன் செல்பி எடுத்து செல்கிறார்கள். மற்ற நாடுகளில், குறிப்பாக பிரிட்டனில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தார் என்று தெரிய வந்ததும் அவர் கைது செய்யப்பட்டார். இப்படியாக மற்ற நாடுகளில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

டைட்டானிக் படத்தில், கேளிக்கை விருந்துகளுக்கு மத்தியில் ஜாக்கும், ரோசும் தங்கள் காதலை வளர்த்தைப்போல் ட்ரம்பும், எப்ஸ்டீனும் இணை பிரியாமல் இருந்ததாக சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *