முச்சந்தி

ஆகஸ்ட் மாதத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்? – சம்பிக்க ரணவக்கவின் அதிரடி எச்சரிக்கை!

இலங்கையின் மின்சக்தி பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், நிலக்கரி கொள்வனவில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதளவில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலவரப்படி மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்

நுரைச்சோலையின் முதலாவது அலகு ஜூன் மாதத்திலும், இரண்டாவது அலகு ஜூலை மாதத்திலும் பராமரிப்புக்காக மூடப்படவுள்ளன.

அத்துடன் களனிதிஸ்ஸ மற்றும் வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கப்படவுள்ளன.

திட்டமிடப்பட்ட 25 கப்பல்களில் இதுவரை 11 கப்பல்கள் மட்டுமே வந்துள்ளன. ஏப்ரல் 20-ஆம் திகதிக்குள் 20 கப்பல்களைக் கொண்டுவரத் தவறினால், ஆகஸ்ட் 27-ஆம் திகதியளவில் நுரைச்சோலை மின் நிலையம் முற்றாக முடங்கும் என அவர் எச்சரித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *