முச்சந்தி

ரியாத், டுபாய்க்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்; ஸ்ரீலங்கள் எயார் லைன்ஸ் அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனிற்கு முன்னுரிமையளித்து, ரியாத் மற்றும் டுபாய்க்கான தமது அன்றாட விமான சேவைகளை மீள ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கள் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நேற்று இரவு ரியாத்திற்கும் இன்று முதல் டுபாபாய்க்கும் விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

அதன்படி UL265 கொழும்பு – ரியாத் 06:15 மணி,
UL266 ரியாத் – கொழும்பு 12:35 மணி,
UL231 கொழும்பு – துபாய் 12:40 மணி
UL232 துபாய் – கொழும்பு 05:00 மணி என அதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில்அறிந்து கொள்வதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *