இலங்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் களமிறங்கிய தேரர்!

மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில்( 09) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையிலான Venerable Battaramulla Seelarathana Thero சிறு குழுவொன்றே இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் வந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கொடிகளை ஏந்தி, போரில் மேற்படி நாடுகளுக்குரிய ஆதரவை வெளிப்படுத்தினர்.

இலங்கையில் நடந்தபோரின்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் வழங்கி ஆதரவை தாங்கள் மறக்கவில்லை என்றபோதிலும், இந்த போரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் நின்கின்றோம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

ஈரான்மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்து கடந்த சில நாட்களாக போராட்டங்கள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே, மேற்படி நாடுகளுக்கு ஆதரவாக தேரர் களமிறங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *