உலகம்

போர் பதற்றம்; F-16 போர் வானூர்திகளை நிலை நிறுத்திய துருக்கி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலை கருத்திற்கொண்டு, துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை வடக்கு சைப்பிரஸில் (Northern Cyprus) தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பின்படி, ஆறு F-16 போர் வானூர்தி வடக்கு சைப்பிரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

போர் வானூர்திகளுடன் மேலதிக வான் பாதுகாப்பு அமைப்புகளும் (Air Defence Systems) அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

எமது பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *