பரம்பரைகளை மலையகத்தில் உருவாக்கிய அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும் – மனோ கணேசன்

மலையகத்தில் எமது பரம்பரைகளை உருவாக்கிய மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.
கொட்டக்கலையில் நேற்று இடம் பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மனோகணேசன்,
கானி, வீடு, வேதனம் இவை மூன்று தான் வாழ்வுரிமையின் பிரதான விடயமாகும் இந்த மூன்று விடயங்களையும் நாம் பெற வேண்டும். இலங்கையில் வாழகூடிய இந்திய வம்சாவளி மக்களாகிய நாங்கள் ஏனைய மக்களைவிட நாங்கள் பின் தங்கி இருக்கின்றோம்.
இருந்தாலும் நாங்கள் எவரும் எதிலும் தாழ்ந்தவர்கள் அல்ல 1948ம் ஆண்டு எமக்கு சுதந்திரம் கிடைத்ததும் குடியுரிமை பரிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு எமது மக்கள் ஒரு சிலருக்கு நாடற்றவர்கள் என்ற ரீதியில் குடியுரிமை கிடைக்கப்பெற்றது.
எங்களுக்கான பாடசாலைகள் கூட 1977ம் ஆண்டு தான் தேசிய பாடசாலை கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 12வருடங்கள் கடந்துள்ளன.
இத்தனை வருடங்களுக்குள் பல விடயங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். நான்கு வருடங்கள் மாத்திரம் நல்லாட்சி அரசாங்கத்தில் ஆட்சியில் இருந்தோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்த பிறகு ஏனைய கட்சிகள் மீதுள்ள குற்றங்களை எம்மீது சுமத்துகிறார்கள். மாரி மாரி நாங்கள் பல அரசாங்கதோடு இருக்கவில்லை. நாங்கள் ஒரே அரசாங்கத்தோடு மாத்திரமே இருந்தோம்.
மாற்று கட்சிகள் 40 வருடங்கலாக அரசாங்கத்தில் இருந்துள்ளார்கள். அவர்களிடமே கேள்வி ஏழுப்ப வேண்டும்.
நான்கு வருடங்கள் இருந்த காலப்பகுதியில் ஏழு பேச் காணி, தனி வீட்டுத்திட்டம், பிரதேசசபை, பிரதேசசெயலகம், மலையக அதிகாரசபை, மலையக பாடசாலைகளுக்கான இரண்டு ஏக்கர் கானி போன்ற அபிவிருத்திகளை நாங்கள் முன்னெடுத்தோம். 40வருடங்கலாக இருந்தவர்கள் ஒன்றுமே செய்யாமைக்கு நாங்கள் என்ன செய்வது.
அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறோம். கண்காட்சி காட்ட வேண்டாம். கண்காட்சி வேண்டாம். எமக்கு ஆட்சிதான் வேண்டும்.
எமது மக்களுக்கான கானியினை வழங்குங்கள். பெருந்தோட்டங்களை எடுத்து கொண்டால் அதில் உள்ள அனைவரும் தொழில் புரியவில்லை.
ஆனால் பெருந்தோட்டங்களில் வாழ கூடிய அனைவருக்கும் காணி வழங்கப்பட வேண்டும். நாங்கள் கூட்டனியாக பேசி பாரத பிரதமரிடம் பேசி பத்தாயிரம் வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொடுத்தோம். அனைவருக்கும் வீடும் காணியும் வேண்டும்.
அதேபோல் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கினார்கள். சம்பளம் அதிகரிப்பது என்பது நல்ல விடயம். தோட்ட தொழிலாளி தொழில் துறையில் பங்காளியாக மாறவேண்டும். அனைவருக்கும் நான்கு அல்லது ஜந்து ஏக்கர் காணி பிரித்து வழங்கப்பட வேண்டும்.
காலம் காலமாக 100ரூபாய் தொடக்கம் 400ரூபாய் வரை போராட முடியாது. சம்பளம் வழங்குவதாக கூறினார்கள். அதனால் தான் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தோம்.
பாராளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தில் அனுர குமார அரசாங்கத்திற்கு நாங்கள் வாக்களித்த போதும் திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட இன்னும் காணி வழங்கவில்லை.
நாங்கள் மாற்றான் தாய் பெற்ற பிள்ளைகள் அல்ல. அனுராதபுரம் மற்றும் குருணாகல் மக்களுக்கு 50இலட்சம் ரூபாய் தந்து உதவியதை போல் மலையக மக்களுக்கும் அந்த உதவிகளை வழங்கி வீடுகளை அமைத்து கொடுத்திருக்க வேண்டும். தற்போது வீடும் இல்லை கானியும் இல்லை. மலையகத்தில் வெகுவிரைவில் தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவோம்.
மலையகத்தில் பயிரீடப்படாத காணிகளை மக்களுக்கு பிரித்து வழங்குவோம் என ஹட்டன் பிரகடனத்தில் அனுர குமார திசாநாயக்க அறிவித்தார்.
ஆனால் இதுவரை அது வழங்கப்படவில்லை அதேபோல் மலையக மக்களுக்கு உரிய அந்தஸ்தை சுகாதார துறையில் வழங்கப்படும் என கூறினார்கள் அதுவும் வழங்கப்படவில்லை.
அதேபோல் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் ஒரு சகோதரியின் உடலத்திற்கு ஏற்பட்ட அசாம்பவிதம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசியிருக்கின்றோம்.
வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியிடம் பேசியிருக்கின்றோம் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பேசியிருக்கின்றோம்.
இவர்கள் பார்ப்பதாக கூறியிருக்கிறார்கள் நாளைய தினம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் பிறகு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என என்றார்.
![]()