ரத்த சோகைக்கு முடிவு கட்டும் ஆட்டு ஈரல் வறுவல்!

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் மட்டன் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆட்டு ஈரல் சாப்பிட பிடிப்பதில்லை.
ஆனால் ஆட்டிறைச்சியை விடவும் ஆட்டு ஈரலில் தான் அதிகமாக ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
ஆட்டு ஈரலில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்திருப்பதால் உடலில் ரத்தத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் அதில் அதிகமாக காணப்படுகின்றது.
ஹீமோகுளோபின் குறைப்பாட்டு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை உணவில் ஆட்டு ஈரலை சேத்துக்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு விரைவில் அதிகரிக்கும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை சாப்பிட்டுவதால் விரைவில் குணமடையும்.
கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒருமுறையாவது ஆட்டு ஈரல் உட்கொண்டு வந்தால், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
ஆட்டு ஈரலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் பி2, பாஸ்பரஸ், தாமிரம், செலினியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் செரிந்து காணப்படுவதால், உடல் ஆரோக்கியாத்தை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஆட்டு ஈரலில் அசத்தல் சுவையில் வறுவல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு
துருவிய தேங்காய் – 2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தே.கரண்டி
சின்ன தக்காளி – 1 (நறுக்கியது)
ஊற வைப்பதற்கு
1 ஆட்டு ஈரல்
மஞ்சள் தூள் – சிறிது
கறி மசாலா தூள் – 3/4 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி
அரைத்த மசாலா வறுவலுக்கு
நல்லெண்ணெய் – 3 தே.கரண்டி
சோம்பு – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – சிறிது
மிளகுத் தூள் – 1 தே.கரண்டி
கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லி சிறிது
முதலில் ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிய அளவிலான தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஆட்டு ஈரலை கழுவி சிறிய துண்டுகளாக்கி, அத்துடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் அரைத்து வத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து பிரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கி அதன் பின் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஊற வைத்துள்ள ஈரலை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து சிறிது தண்ணீரை ஊற்றி பிரட்டி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரையில் எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கிளவிட்டு , மிளகுத் தூளை சேர்த்து கலந்துவிட்டு மூடி வைத்து 2 நிமிடம் வேகவிட வேண்டும்.
கடைசியாக அதில் கறிவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் வறுவல் தயார்.
![]()