கவிதைகள்

நினைக்க நினைக்க நெஞ்சில் இனிக்கின்றார்… கவிதை…. சங்கர சுப்பிரமணியன்.

திரு. முருகபூபதி அவர்களை கௌரவப் படுத்துவதையொட்டி அவருக்காக வடித்த கவிமலர்.

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்
பூபதி பழகப் பழக அன்பில்
திளைக்கின்றார்

தமிழ் தமிழென்றே தினம்
வாழ்கின்றார்
அந்த தமிழே மூச்சாய் என்றும்
இருக்கின்றார்

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்
பூபதி பழகப் பழக அன்பில்
திளைக்கின்றார்

தமிழ் தமிழென்றே தினம்
வாழ்கின்றார்
அந்த தமிழே மூச்சாய் என்றும்
இருக்கின்றார்

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்

எத்தனை இடர்கள் எத்தனை வரினும்
அத்தனையிலும் வெற்றி கண்டார்
எத்தனை இடர்கள் எத்தனை வரினும்
அத்தனையிலும் வெற்றி கண்டார்

துயர்களைக் கண்டு துவண்டு விடாது
துணிவுடன் அவரெதிர் கொண்டார்
துயர்களைக் கண்டு துவண்டு விடாது
துணிவுடன் அவரெதிர் கொண்டார்

லெ. முருகபூபதி

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்

தேடித்தேடி திறமைகளெல்லாம்
தன் வசம் அவரே கொண்டார்
தேடித்தேடி திறமைகளெல்லாம்
தன் வசம் அவரே கொண்டார்

நாடி அவரை வருவோரையுமே
தமிழின் வழியே ஈர்த்தார்
நாடி அவரை வருவோரையுமே
தமிழின் வழியே ஈர்த்தார்

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்

எழுதுவதொன்றே தன் பணி என்றே
வாழ்நாள் பணியாய்ச் செய்தார்
எழுதுவதொன்றே தன் பணி என்றே
வாழ்நாள் பணியாய்ச் செய்தார்

பணியைச் சிறப்பாய் செய்ததனாலே
வாழ்நாள் சாதனை ஆனார்
பணியைச் சிறப்பாய் செய்ததனாலே
வாழ்நாள் சாதனை ஆனார்

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்
பூபதி பழகப் பழக அன்பில்
திளைக்கின்றார்

தமிழ் தமிழென்றே தினம்
வாழ்கின்றார்
அந்த தமிழே மூச்சாய் என்றும்
இருக்கின்றார்

நினைக்க நினைக்க
நெஞ்சில் இனிக்கின்றார்

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *