போல, ஒப்ப, புரைய என்றாகி விட்ட மனித வாழ்க்கையும்…. சின்னத்தம்பி குருபரன்

குகைகளிலும், காடுகளிலும், மரங்களிலும் நாடோடிகளாக வழ்ந்து வந்த மனிதன் காலப் போக்கில் நதிக்கரைகளை அண்டி குடிசை அமைத்து நிலையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். இந்த நலையான வாழ்க்கையே அவனது உள்ளத்திலும் நடத்தையிலும் வாக்கைக் கோலத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தின. இந்த மாற்றம் நிலையான குடும்ப வாழ்க்கைக்கு வித்திட்டது. இதுவே உலகில் பல நதிக்கரை நாகரிகங்கள் தோன்றக் காரணமாக அமைந்தன. இக்கட்டமைப்பு மொழி, இனம், மதம், குலம், கோத்திரம், சாதி, சம்பிரதாயம் பழக்கவழக்கம், ஒழுக்கலாறு, விழுமியம் என்ற வகையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நிலையான வாழ்க்கை இருப்புக்கு வழிவகுத்தன.
மனிதன் வாழ்க்கையில் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். இவ்வாறு ஆரம்பித்த வாழ்க்கைப் பயணம் அன்பு, கருணை, காருண்ணியம், விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, சுயமரியாதை என்பவற்றுடன் வஞ்சகம், சூது, வாது, கள்ளம், கபடம், களவு, பொய், காமம், கொலை, போட்டி, பொறாமை எல்லாம் கலவையாகி குடும்பம், கிராமம், நகரம், நாடு, பிராந்தியம், சர்வதேசம் என்றவகையில் நேர், எதிரான பல தாக்கங்ளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று குடும்பக் கட்டமைப்பும் வாழ்க்கை முறையும் பல இடங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.
மனித வாழ்க்கை என்பது மிக மிகப் பெறுமதியானது. புனிதமானது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இடைவெளிக்குள் வாழ்வதற்கென விதிக்கப்பட்டது வாழ்க்கை. உலக வாழ்க்கையில் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு (இறப்பு) ஆகியன நிந்தரமானவை. அந்த வகையில் பிறப்பும் இறப்பும் மகிழ்ச்சியானது. ஆனால் இந்து மத ஆச்சாரம் தொடக்காகவும், விலக்காகவும் கொள்கிறது. உலகின் பல மதப் பிரிவுகள் அவை இரண்டையும் மகிழ்ச்சியாகவே சார்க்கின்றன. மனித வாழ்க்கையில் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை அனுபவிக்காமல் பெரும்பாலானோர் வாழ்கையைச் சிறப்பாக வாழ முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கினறனர். நமது வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும் அது நம் கையிலதான் உள்ளது. பலவீனமான ஒருவரின் வாழ்கையை இன்னொருவர் தீர்மானிக்கின்றார். அவரின் தாளத்துக்கு இவர் ஆடுகின்றார். இவ்வாறுதான் பலர் பெறுமதியற்றதாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
வாழ்க்கையை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதன் இன்ப, துன்ப, துயரங்களை விரும்பியோ, விரும்பாமலோ அனுபவித்தே ஆகவேண்டும். இவை எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை”. என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் கவிஞர் வாலி உட்படப் பலரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது.. அது ஒரு வாழ்கைத் தத்துவம்.

இந்த இயற்கை எல்லா வளமும் நிறைந்தவை. வாழத் தெரிந்தவனுக்கு இது ஒரு பொக்கிசம். வாழத் தெரியாதவனுக்கு வெறும் நரகம். வாழத் தெரிந்தவன் உச்சத்தை எட்டுகிறான். வெற்றியை அடைகிறான். வாழத் தெரியாதவன் துன்ப, துயரங்களில் உழன்று கொண்டிருக்கிறான். உலகில் இரவு, பகல் தோன்றுவது போல் துன்ப, துயரங்களும் நிரந்தரமானவை. அவற்றிலிருந்து விடுபட்டு சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதியோடு வாழப் பழகிக் கொண்டவன் எத்தகைய சூழ்நிலையிலும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வாழ்பவனாகின்றான். ‘உங்களில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக, சந்தோசமாக வாழ்கிறீர்கள்’ எனறு கேட்டால் பலரிடம் இருந்து இல்லை என்பதே பதிலாக வரும். இதற்குக் காரணமென்ன?. நாம் வாழ்கையைத் திட்டமிட்டுச் சரியாக வாழவில்லை என்பதுதான் அர்த்தமாகிறது. ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது போல் எல்லோரிடமும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை, குறைகள், எதிர் பார்ப்புக்கள் இருக்கின்றன. அதற்குக் காரணம் நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை இன்னொருவருக்காக வாழ்ந்து கொண்டிருப்பதுதான். பிறரைப் பார்த்து அவரின் வாழ்க்கை முறையை ஆகர்சித்து போல, ஒப்ப, புரைய என்பது போல பலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர்.
வாழ்கை என்பது உலகில் வாழும் சகல உயிர்களுக்கும் கொதுவானது. அவற்றுள் மனிதனை சிந்திக்கச் சிரிக்கத் தெரிந்த விலங்காக விஞ்ஞானம் இனங்காட்டுகிறது. மனிதன் பரிசம், ரசம், கந்தம், ரூபம்,, ரூபாரூபம், பகுத்தறிவு ஆகிய ஆறறிவினைக் கொண்டவன். அவன் பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்கையைச் சீரமைத்துக் கொள்கிறான். அத்தகைய மனிதனைப் பலவீனமாக்குவது ஆசை, அகம்பாவம், கோபம், பதவி, அதிகாரம், செல்வாக்கு, புகழ், ஆகியன. இவற்றுள் ஒருவரிடம் சிலவோ பலவோ ஒன்றித்திருப்பின் அவர் விரைவில் தோல்வியடையத் தயாராகின்றார் என்பது அர்த்தமாகின்றது. ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.’ ஆனால் இன்றோ அவ்வாறல்ல பதவி வரும்போது கொம்பு முளைத்தவர்கள் போல் இறுமாப்புடன் பலர் சமூகத்தில் நடமாடுகின்றனர். பதவிக்கூடாக உருவாகும் ஆசை, அகம்பாவம், கர்வம், நான் என்ற அகங்காரம், ஆள்பலம், செல்வாக்கு, அதிகாரம ஆகியன ஒருவரிடம் வந்து சேர்ந்தால் அவர் தலை, கால் புரியாமல் ஆட்டம் போடுவார். இன்று அவ்வாறுதான் பலர் நடந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரைவில் ஆட்டங்கண்டு பதவி, கௌரவம், செல்வாக்கு, புகழ் அனைத்தையும் இழந்து சமூகத்தினால் தூக்கி வீசப்படுவர் என்பது வரலாறு உணர்த்திய உண்மைகளாகும். அதேபோல் அகம்பாவத்தினால் தோல்வி அடைக்தவர்களின் வரலாற்றை படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உலக வரலாற்றில் நிகழ்ந்த யுத்தங்கள், படையெடுப்புக்கள், அரசர்களிடம் காணப்பட்ட மண்ணாசை, பெண்ணாசை, பொன்னசை, புகழாசை என்பவற்றால் அவர்களின் சாம்பிராச்சியங்களும், பேரரசுகளும் தோல்வியடைந்து, ‘முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பலாவர்’ என்பதை மிகச் சாவகாசமாக உணர்த்திய வரலாறுகளை அறிந்து கொள்வதன் மூலம் தெளிவடையலாம். அத்தகைய வரலாறுகள் உணர்த்திய உண்மைத் தத்துவத்தை மறந்து மனிதன் மனதின் இச்சை வழிக்கு ஆட்பட்டு மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
“மனம் போன போக்கிலே கால்கள் போகலாமா? கால்கள் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா…”
என்ற கவிஞரின் பாடலடிகள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. பெரும்பாலானோர் தனக்கென, சமூகத்துக்கென, நாட்டுக்கென வாழாது போல, ஒப்ப, புரைய வாழ்ந்து கொண்டிருக்கினறனர்.
நமது வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும் என்பதை மறந்து, வாழ்கை பெறுமதியானது, அழகானது, இரம்மியமானது, நாம் இழந்த வாழ்க்கை மீண்டு வராது என்பதை உணராது மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் பலர். இன்னும் பலர் தமது வாழ்க்கையை குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல்; சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால் வாழ்கை சுவாரசியமாக இருக்காது. அது கஷ்டம், நஷ்டம், துன்பம், துயரம், சவால்கள், வெற்றி, தோல்வி, ஏமாற்றம், எதிர்ப்புகள், துரோகம், வஞசகம் என்பவற்றுக்கூடாக அவற்றை எதிர் கொண்டு சமாளித்து வாழப் பழகிக் கௌ;ள வெண்டும். வாழ்க்கையைப் புடம்போட்டுக் கடடி எழுப்ப்படும் போதுதான் அது பெறுமதியானதாக மாறுகிறது. ஒவ்வொருவருடைய வெற்றியும் இன்னொருவருடைய பலவீனத்துக்கூடாகக் கட்டியெழுப்பப்படுகிறது. எதுவம் நிரந்தரமானதல்ல. யாவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. என்ற தத்துவத்தை உணர்த்தி மறைந்து போகும். எல்லாமே ஒருநாள் அழிந்து போகும். தோன்றியது எதுவும் நிரந்தரமானதல்ல. அதேபோல் ஆக்கப்பட்டது எதுவும் என்றோ ஒரு நாள் அழிந்து போகும். இந்த உலகும் அவ்வாறுதான். கொவிட்-19 உட்பட அமெரிக்காவின் நச்சத்திரப் போர்த் திட்டம், சீனாவின் முத்துமாலைத் திட்டம எல்லாமே என்றோ ஒரு நாள் அழிந்து போகும்.
ஒருவருக்குக் கிடைக்கும் பதவியும் புகழாசையும் கர்வமும் அவரின் சுயத்தை மறைத்து நான் என்ற அகம்பாவத்தை உருவாக்கி விடுவதனால் அவருடைய பின் மூளையின் செல்வாக்கு மேலோங்குகிறது. மனிதனுள் இருக்கும் குணத்தை மனிதன் பாதி, மிருகம் பாதி என இருவகைப் படுத்துகின்றனர் உளவியலானர்களும் சமூகவியலளர்களும். இவை இரண்டும் ஒரு மனிதனுக்குன்ளேயே அடங்கியிருக்கும். அவனிடம் மனித குணங்களும் (நற்குணம்) மிருக குணங்களும் (தீய குணம்) காணப்படுகின்றது. நல்ல குணத்தை மேலோங்கச் செய்து, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்க விழுமியம், சமய சிந்தனைகள், தியானம் என்பவற்றுக்கூடாக மிருக குணத்தைக் கட்டுப்படுத்திச் சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்குரிய பக்குவத்தை வழங்குகிறது. நமது வாழ்க்கையில் தினமும் நேர், எதிரான செயற்பாடுகளைக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
மனிதனிடம் காணப்படும் நேரான மனப்பாங்கு மனித குணத்தையும், எதிரான மனப்பாங்கு மிருக குணத்தையும் வெளிப்படுத்தப்படுகின்றன. எதிரான செயற்பாடுகளுக்குச் சக்தி அதிகம் என்பதால் மிக வேகமாகச் செயற்பட்டு மிருக குணம் வெளிப்படுத்தப்படும். இந்த வகையில் பார்க்கும்போது பலரிடம் மிருக குணங்களே மேலோங்கிக் காணப்படுவதை அவதானிககலாம். எமது மூளையின் முன்பக்கம் மனித குணத்தையும் பின்பக்கம மிருக குணத்தையும் வெளிக்காட்டத் தக்கவாறு மூளை அமைந்திருப்பதாக விஞஞானிகளும், உளவியலாளர்களும் தமது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இன்று பெரும்பாலானோர் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு நடைமுறை வாழ்கையில் மிருக குணத்தை வெளிக்காட்டி நோயாளிகளாக வாழ்கின்றனர். இத்தகையோர் ஆயுள் குறைந்தவர்களாக இருப்பர் என ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.
வாழ்வில் ஒருவர் சலனமில்லாமல், சஞ்சலமில்லாமல் பதட்டமில்லாமல் இருக்கும்போது தமது கடமையிலும் செயற்பாடுகளிலும் அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் செயற்படுவார். அவர் சுயபுத்தியோடு செயற்படுவார். அவரிடம் நல்லொழுக்கமும் பாரபட்சமில்லாத நேரான மனநிலையும் காணப்படும். அவர் வாழ்நாளில் நோயற்ற வாழ்வு வாழ்வார். இத்தகைய பண்புகளே சகலரிடமும் எதிர்பார்க்கப்படுகின்றன. அயன மண்டல நாடுகளில் பெரும்பாலானோரிம் இத்தகைய பண்புகள் குறைவாகவே காணப்படுகின்றன. அதற்குக் காரணம் அயன இந்நாடுகளில காணப்படும் அதிகரித்த வெப்பம் உடல், உள ரீதியாகப பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்நாடுகளில் வாழும் பலரிடம் கோபம், மூர்க்கத்தனம், பொறாமை, வஞசகம், சூது, வாது, கபடத்தனம், வரட்டுப் பிடிவாதம் ஆகியன மேலோங்கிக் காணப்படும். இதில் ஒன்றாக இந்நாடுகளில் வாழ்கின்ற பெண் பிள்ளைகளில் பெரும்பாலானோர் சிறு வயதில் பூப்படைதலைக் குறிப்பிடலாம். இளம் வயதில் பூப்படைவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் காலநிலை வெகுவாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவர்கள் மன இச்சைகளுக்கு வரைவாக ஆட்படுபவர்களாகவும் காணப்படுவர். மன உறுதியும், திடகாத்திரமும், சுயபுத்தியும் இல்லாதவர்கள் போல, ஒப்ப, புரைய என்றவாறே வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்.
போல, ஒப்ப, புரைய என்பதை தமிழ் இலக்கஒ நூலான ~நன்னூல’; உவமை உருபுகளாகவே சுட்டி நிற்கின்றது. இவை தமிழ் மொழியில் ஒன்றை ஒப்பிடுவதற்கும் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகினறன. ஒப்பிட்டுக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் உவமை உருபுகள் சிலரின் வாழ்க்கையை ஒப்பிடவும் பலரின் வாழ்க்கையையும் பல குடும்பங்களைச் சீரழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல நோக்கத்துக்காகப் பயன்பட்டு வந்த உவமை உருபுகள் சுயபுத்தி இல்லாதவரின் கைப்பட்டுப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று பெரும்பாலானோர் வேடமிட்டுப் பொய் முகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கினறனர். தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்தில், சமூகத்தில், தொழில் தலத்தில் என வெவ்வேறு முகங்களை வெளிக்காட்டி கொண்டிருக்கினறனர். எவரொருவர் மேற்குறிப்பிட்ட நான்கு இடங்களிலும் பல்முகங்காட்டாது உண்மையோடு வாங்கின்றாரோ அவரே உத்தமனாகின்றார். அவ்வாறானவர்களை நடைமுறையில் காண்பது மிக அரிதாகும். இன்னும் பலர் மாபெரும் நடிகர், நடிகைகளாகச் சமூகத்தில் நடமாடிக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம், தொழில் தலம் என்பவற்றில் பல பிரச்சினைகள் உருவாகுவதற்கும், அவை சில வேளைகளில் விஸ்வரூபம் எடுத்து முறைமையை ஆட்டங்காண வைப்பதற்கும் போல, ஒப்ப, புரைய பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நல்ல நோக்கத்தோடு ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தினால் சகலமும் விருத்தியடைய வாய்ப்புள்ளது. ஆனால், இன்று பெரும்பாலான குடும்பங்களில் எதிர்மறையான சிந்தனைகளோடு பயன்படுத்தப்படுவதனால் பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் சந்தோசமான, மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை பாதிக்கப்பட்டுப் பல குடும்பங்கள் பனிப்போர் நிலையில் முரண்பாடுகளுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கினறனர்.
பலர் வாழ்கை வாழ்வதற்கே என்பதனை மறந்து மனம் போன போக்கில் வாங்ந்து கொண்டிருக்கினறனர். நல்ல குடும்பம் ஆனந்தமான பல்கலைக் கழகமாக இருக்கும். ஆனால், இன்றோ போல, ஒப்ப, புரைய என்கின்ற உவமிப்புக்கு முக்கியத்துவம் பொடுத்து வாழ்க்கையில் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதியைத் தொலைத்து அமைதியான குடும்ப வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கினறனர். இன்று நாம் நினைத்தது கிடைத்துவிட்டால் சந்தோசம், அச்சந்தோசம் பல நாட்களுக்கு நீடித்தால் மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சி வாழ்கை முழுவதும் நீடித்தால் அதுதான் நிம்மதியான வாழ்க்கையாகும். அத்தகைய வாழ்க்கையே சிறந்த, போற்றத்தக்க வாழ்க்கையாகும்.
இன்று பலர் வரவுக்கேற்ற செலவு செய்வதில்லை. கடன் வாங்கியாவது செலவு செய்வதில் குறியாக இருக்கினறனர். அவர்கள் ‘விரலுக்கேற்றதுதான் வீக்கம்’ என்ற முதுமொழியை மறந்து செயற்படுகின்றனர். வரவுக்கேற்ற வாழ்க்கையை விடுத்துச் செலவுக்கேற்ற வாழ்கை என வாழ்க்கையை நடாத்துகின்றனர். ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்பதே தமது வாழ்க்கையாகப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர். கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது செலவு செய்வோம் என்ற நிலைக்குப் பலரும் மாறிவிட்டனர். தமது கையிருப்பு, வருமானம் என்பவற்றை வைத்துத் திட்டமிடாமல் அவர் அப்படிச் செய்திருக்கிறார். இவர் இப்படிச் செய்திருக்கிறார், அவ்வாறே நாமும் செய்வோம் எனப் பலரை ஒப்பிட்டுக் காட்டிச் செலவுக்குத் திட்டமிடுகின்றனர்.

வாழ்க்கை என்பது திட்டமிட்டு வடிவமைக்கப்பட வேண்டியது. செலவும் அவ்வாறுதான். வரவு. செலவு, பழக்க வழக்கம், நாளாந்தச் செயற்பாடுகள் எல்லாவற்றையும் திட்டமிட்டுக் குடும்பத்தினருடன் கலந்துரையாடி, வெளிப்படைத் தன்மையோடு விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வுடன் செயற்படும் போதுதான் வாழ்கையின் சுவாரசியம் உணரப்படும். நேரான விடயங்கள் பிரபல்யம் பெறுவதையும்விட எதிரான விடயங்கள் மிகச் சீக்கிரம் பெருவாழ்வு பெற்றுவிடும். உண்மை பெரும்பாலும் உறங்கி இருக்க பொய்மை சீக்கிரம் விழித்தெழுந்து பிரபல்யம் பெற்று விடுகின்றன. சில வேளைகளில் பொய்மை பல ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும். பல குடும்பங்களிலும் அவ்வாறுதான் உண்மை வெளிப்படாமல் பொய்மை வாழ்ந்து கொண்டிருக்கும். அப்போது சகலவற்றிலும் போல, ஒப்ப, புரைய உருபுகள் எதிர்மறையாகச் செயற்பட அரம்பிக்கும். சந்தேகங்களும், ஒப்பீடுகளும், எதிர்பார்க்கைகளும் மேலோங்கி குடும்பத்தின் அமைதி, சந்தோசம் ஆகியன எம்மைவிட்டுச் வெகுதூரம் சென்றுவிடும்.
எனக்குத் தெரிந்த ஒருவர் தனது மகளின் திருமணத்துக்கு ஆயிரம் பேருக்கு அழைப்புக் கொடத்து மண்டபத்தில் நடாத்தி இருக்கின்றார். மாப்பிள்ளை டொக்டராம் மகளுக்குப் பத்துப் பவுணில் தாலிக்கொடி கட்டி இருக்கின்றார். அதைப் பார்த்துப் பொறமைப்படட மற்றவர் தனது மகளுக்கு வரும் மாப்பிள்ளை பதினொரு பவுணில் தாலிக்கொடி கட்ட வேண்டும். அதைவிடச் சிறப்பாகச் சபை நடாத்திக் காட்டட வேண்டும் எனப் போல சிந்தித்துத் திருமணம் நடாத்திக்; கடன் தொல்லையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
அதேபோல் அலுவலகம் ஒன்றில் வேலை செய்பவர் மாடி வீடு கட்டி இருக்கின்றார். அவர் மாடி வீடு கட்டியதைப் பார்த்த இன்னொருவர் கடன் பட்டாவது ஒரு மாடி வீடு கட்டி முடிக்க வேண்டும் எனத் தனது செல்வங்கள் யாவற்றையும் செலவிட்டு, நகை நட்டுக்களை ஈடு வைத்தும், வங்கியில் கடன் பெற்றும்; வீட்டைக் கட்டி முடித்திருக்கின்றார். மற்றவரை ஒப்பிட்டுப் புனைந்து வீடு கட்டியதனால் தற்போது வீட்டுச் செலவுக்குக் கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார் செலவைத் திட்டமிட்டுக் கலந்துரையாடி அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்றுச் செயற்பட்டிருந்தால் இத்தகைய நிலைமை அவருக்கு வந்திருக்காது.
அதேபோல் வீட்டுப் பாவனைப் பொருட்கள், சிமார்ட் கைபபேசி, மோட்டார் சைக்கிள், கார், உடு துணிகள், தனிப்பட்ட பாவனைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்யுமுன்னர் தமது கையிலுள்ள பணம், அவற்றின் தேவை, அதன் முக்கியத்துவம் ஆகியவற்றைச் சிந்தித்து அதன் அடிப்படையில் பொருளைக் கொள்வனவு செய்திருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செயற்படாமல் கடன் மற்றும் தவணைக் கொள்வனவு முறையில் கொள்வனவு செய்து பலர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவரைப்போல் சிமார்ட் கைப்பேசி, இவரைப்போல் குளிர்சாதனப் பெட்டி, பக்கத்து வீட்டுக்காரரைப் போல் சிமார்ட் தொலைக்காட்சி, நண்பரைப்போல் பல்சர் மோட்டார் சைக்கிள், தங்கையின் கணவரைப்போல் கார் எனப் போல, ஒப்ப, புரைய என எதிர்பார்த்தும் கொள்;வனவு செய்தும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பலர் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நாம் வாழ வேண்டிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் போல, ஒப்ப, புரைய வலிந்து கொண்டு தமது வாழ்க்கையை வாழ முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். தொழில் தேடுவதிலும், பிள்ளைக்கு மாப்பிள்ளை, பெண் பாரப்பதிலும் தொழில் செய்வதிலும் மற்றவரைப் பார்த்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கினறனர். இன்று பலர் ஒவ்வொரு விடயத்திலும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது எதிர்காலத்துக்கும் குடும்பத்துக்கும் நல்லதல்ல. பெரும்பாலான தாய், தந்தையர் பிள்ளைகளுக்குத் தமது கஷ்டத்தைச் சொல்லி வளர்பதில்லை. தமது பிள்ளைகள் மற்றவரைப்போல் வைத்தியராக, பொறியியலாளராக, வழக்கறிஞராக, கணக்காளராக, ஆசிரியராக, உயர் அதிகாரியாக வருவதை விரும்பி பிள்ளைகளின் இயலுமை, விருப்பம் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளாது கல்வியைத் திணிக்கினறனர். அதனால், பல பிள்ளைகளின் எதிர் காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகின்றனர். அதேபோல் பிள்ளைகளும் தமது இயலுமை, விருப்பம், ஈடுபாடு என்பவற்றைக் கவனத்தில் கொள்ளாது மற்றவரைப ;பார்த்துப் பாடத் துறையைத் தெரிவு செய்து எதிர்காலத்தைக் குழி தொண்டிப் புதைத்து விடுகின்றனர்.
எந்தக் கருமத்தையும் செய்ய முற்படும் முன்னர் ஒன்றுக்குப் பல தடைவை சிந்தித்து முடிவெடுத்துச் செயலில் இறங்க வேண்டும். செயலில் இறங்கிய பின்னர் அதன் முன்னேற்றத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர திட்டத்தின் சரி, பிழை பற்றி ஐயம் கொள்ளக் கூடாது. அதனையே வள்ளுவர். “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு” எனத் திட்டமிடல் பற்றிக் கூறியிருக்கின்றார். நாம மற்றவரைப் பார்த்து, அவரைப்போல் பிரதி பண்ணி கருமங்களைச் செய்வதையும்விட நமக்காக நாம் செய்தல் வேண்டும். நமது பொருளாதாரச் சூழல், கையிருப்பு என்பவற்றைக் கொண்டு நம்மிடம் உள்ளதுக்குள் செய்து முடிக்கும் போது வாழ்க்ககை மகிழ்ச்சிகரமாக அமையும். அதைவிடுத்து அவர் கூறுகிறார், இவர் சொல்கிறார், மனைவி, பிள்ளைகள் கூறுகின்றனர் என அதன்படி செயற்பட முனைந்தால் நிம்மதியைத் தொலைத்து விடுவோம். அளவோடு, பெருமையோடு, வரவுக்கு ஏற்ப செலவு செய்தமகிழ்வோடு வாழ்வதில்தான் நிம்மதி இருக்கிறது.
இவ்வுலகில் நமக்கென நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், நமது குடும்பத்தில் நாம் நமக்காக வாழ்வதில் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி கிடைப்பது போல் எதிலும் கிடைப்பதில்லை. இந்தப் பெறுமதியான, அழகான வாழ்க்கையில் இல்லாத, கிடைக்க முடியாத ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் காலத்தைக் கடத்துவதைவிட நடிகர் ரஜினி முத்து படத்தில் கூறுவது போல் ‘கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காதது கிடைக்காது’ என்பதை மனதில் கொண்டு சந்தோசத்தை அனுபவித்து நிம்மதியாடு வாழ்வோம்.
![]()