உலகம்

நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிப்புச் சம்பவம்

நோர்வேயின் ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பு அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், இதற்கான காரணம் அல்லது இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து இதுவரைத் தகவல்கள் வெளியாகவில்லை என ஒஸ்லோ நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூதரகத்தின் தூதரகப் பிரிவு நுழைவாயிலுக்கு அருகிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இந்த வெடிப்பினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் குறித்து அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *