நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் இலங்கை பக்கச்சார்பாக இருக்கக் கூடாது; முன்னாள் ஜனாதிபதி மகிந்த

உலக நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் இலங்கை எந்த நாட்டுக்கும் பக்கச்சார்பாக இருக்கக் கூடாது என்றும், இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்துவதற்காக எந்த தரப்பினருக்காவது இடமளித்தால் எந்த பக்கத்தில் இருந்தாவது அடி வாங்க நேரிடும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், தற்போதைய போர் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏற்பட்டுள்ள யுத்தத்தை தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது. கூடிய விரைவில் அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் உயிரை காப்பாற்றும் எந்தவொரு நடடிக்கைக்கும் நாங்கள் ஆதரவளிப்போம். நாடென்ற வகையில் யுத்த விடயத்தில் நாங்கள் ஏதேனும் பக்கத்திற்கு சார்பாக இருக்கக்கூடாது. எமது துறைமுகத்தை பயன்படுத்த அனுமதி வழங்கினால் எந்த பக்கத்தில் இருந்தாலும் அடி வாங்க நேரிடும் என்றார்.
![]()