உலகம்

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் உயிருடன் உள்ளாரா!

இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக பரப்ரப்பு தகவல் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் அமெரிக்க கூட்டுதாக்குதலில் சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் போது முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அஹ்மதிநெஜாத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் வான்வழித் தாக்குதலில் அவர் இறந்ததாக முன்னர் வெளியான செய்திகளுக்கு மாறாக, புதிய காட்சிகள் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

வான்வழித் தாக்குதல் குறித்த முந்தைய கூற்றுகளை பொய்யாக்கும் வகையில், முன்னாள் அஹ்மதிநெஜாத் ஒரு கல்லறைக்கு வருவதை காணொளி வெளியாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *