ஈரானின் புதிய தலைவரை படுகொலை செய்வோம்; இஸ்ரேல் சபதம்: மத்திய கிழக்கில் தாக்குதல்கள் தீவிரம்

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்பவரை படுகொலை செய்வோம் என்று இஸ்ரேல் சபதம் செய்துள்ள அதே வேளையில், தெஹ்ரானில் உள்ள ஈரானின் இராணுவ இலக்குகள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி (56 வயது), ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக செவ்வாய்க்கிழமை மாலை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில்,
“அயதுல்லாவின் மகன் மொஜ்தபா பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘நிச்சயமான இலக்காக’ அவர் இருப்பார்”
“இஸ்ரேலை அழிக்கும் திட்டத்தைத் தொடரவும், அமெரிக்கா மற்றும் சுதந்திர நாடுகளை அச்சுறுத்தவும், ஈரான் மக்களுக்கே துரோகம் இழைக்கவும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு தலைவரும் — அவர் யாராக இருந்தாலும் சரி, எங்கு ஒளிந்திருந்தாலும் சரி — நிச்சயமாக படுகொலை செய்யப்படுவார்.”என்றும் சூளுரைத்துள்ளார்.
இதேவேளை டுபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஈரானிய ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சி.ஐ.ஏ. தளம் மற்றும் டுபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலால் அமெரிக்க தூதரகம் தீக்கிரையானது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
![]()