இலங்கை வரை வந்து விட்ட போர்க்களம் ; காலி கடலில் ஈரானிய போர்க் கப்பல்

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த அதிர்ச்சிகரமான அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதலில், ஈரானிய கடற்படை போர் கப்பல் ஒன்று முற்றாக அழித்து மூழ்கடிக்கப்பட்டதுடன் இந்தத் தாக்குதலில் 101 பேர் மாயமாகியுள்ளதுடன் 32 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அமெரிக்க அதிகாரிஉறுதிப்படுத்தியுள்ளதுடன் ஒருவர் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், இந்தத் தாக்குதல் அமெரிக்க இராணுவ நீர்மூழ்கிக் கப்பலால் நடத்தப்பட்டது என்று கூறினார்.
நீருக்கடியில் தாக்கும் ஏவுகணை மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது பெரும்பாலும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் இருந்து நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, போர்க்கப்பலில் இருந்த 32 பேரை மீட்டெடுத்ததாகவும், கடலில் இருந்து பல உடல்களை மீட்டெடுத்ததாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் போர்க்கப்பல் மூழ்கியதில் 100-க்கும் மேற்பட்ட ஈரானிய மாலுமிகள் மாயமாகியுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையின் தெற்கே சுமார் 25 மைல் தொலைவில் IRIS Dena என்ற போர்க்கப்பல் ‘வெடிப்புச் சத்தத்துடன்’ மூழ்கியதை அடுத்து, இந்தியப் பெருங்கடலில் நேற்று காலை முதல் ஒரு பெரிய தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசியல்வாதிகள் மறுத்துவிட்டனர். இருப்பினும், ஒரு இராணுவ ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் பேசுகையில், அந்த கப்பல் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதாகக் கூறியது. ஆனால், அது யாருடைய நீர்மூழ்கிக் கப்பல் என்பதைக் குறிப்பிடவில்லை.
இந்த மீட்பு நடவடிக்கையில் வேறொரு நாட்டின் இராணுவம் சம்பந்தப்பட்டிருப்பதால், அதன் காணொலிகளை வெளியிட முடியாது என இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தெரிவித்துள்ளன.
![]()