பலதும் பத்தும்

75 மில்லியன் டொலர் லொத்தர் சீட்டு ஜாக்பொட்

கனடாவின் டொராண்டோ நகரில் ஒருவர் 75 மில்லியன் டொலர் மதிப்புடைய லொத்தர் சீட்டு ஜாக்பொட் பரிசை வென்றுள்ளார்.

ஒன்டாரியோ லொத்தர் சீட்டு மற்றும் கேமிங் கழகம் – OLG புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Lotto Max சீட்டிலுப்பின் வெற்றி லொத்தர் சீட்டு டொராண்டோ நகரில் எங்கோ விற்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்னும் அந்த அதிர்ஷ்டசாலி தனது பரிசை கோரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொன்றும் 1 மில்லியன் டொலர் மதிப்புடைய இரண்டு “மேக்ஸ்மில்லியன்ஸ்” பரிசுகளும் அதே சீட்டிலுப்பில் வென்றுள்ளதாக OLG தெரிவித்துள்ளது.

அவற்றில் ஒரு லொத்தர் சீட்டு டொராண்டோவில் விற்கப்பட்டதுடன், மற்றொன்று OLG இணையதளம் (OLG.ca) மூலம் விற்கப்பட்டுள்ளது.

அனைத்து லொத்தர் சீட்டு கொள்வனவாளர்களும் தங்களது லொத்தர் சீட்டுகளை விரைவாக சரிபார்க்குமாறு OLG அறிவுறுத்தியுள்ளது.

OLG செயலி அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் நிலையங்களில் லொத்தர் சீட்டுகளைச் சரிபார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *