உலகம்

இஸ்ரேல் ஊடுருவலுக்கு மத்தியில் லெபனான் பிரதமர் சபதம்!

இந்த அழிவுகரமான போரை முடிவுக்குக் கொண்டுவர எத்தகைய முயற்சியையும் எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று லெபனானின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தரைவழி ஊடுருவலைத் தொடங்கிய பிறகு இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்து பிரதமர் நவாப் சலாம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழிவுகரமான போரை முடிவுக்குக் கொண்டுவரவும் இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் லெபனானையும் அதன் மக்களையும் பாதுகாக்கவும் தாங்கள் எத்தகைய முயற்சியையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளான மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு கருத்துரைத்த அவர் நீங்கள் தனிமையில் இல்லை.

லெபனான் முழுவதுமே உங்கள் வீடுதான். என்று குறிப்பிட்டுள்ளார். தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்த மக்கள்இ தங்களுக்கு நேர்ந்த அவலங்களுக்குப் பொறுப்பானவர்கள் அல்ல.

அவர்கள் பலிகடாக்கள் – அவர்களால் உருவாக்கப்படாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *