உண்மையைச் சொல்வதே உண்மையான வரலாறு… ஏலையா க.முருகதாசன்

ஒரு வரலாற்று அறிஞர் தான் சொல்லும,தன்னினம் சம்பந்தப்பட்ட வரலாற்;று உண்மையினால் தன்னினம் பற்றிய உண்மை வெளிப்படையாகத் தெரியுமெனினும் மூடிமறைக்காமல் சொல்பவரே உண்மையான வரலாற்றாசிரியராவார்.
அண்மை நாட்களில், பௌத்த மதகுரு கலகொட அத்தெ ஞானசார தேரர் வட கிழக்கில் சிங்கள பௌத்த மரபுரிமை இடங்கள் இருப்பதால் வட கிழக்கும் சிங்களவர்களுடையதே என ஒரு சந்திப்பில் கூறியிருந்தார். அவர் மதவெறியைத் தூண்டுபவர்தான்.
ஆனால் அவரின் கூற்றில் உண்மையில்லாமலில்லை.எனது முகநூலிலும் தனிக் கட்டுரைகள் வழியாகவும் சோழரின் இலங்கை மீதான அவர்களின் படையெடுப்பை எதிர்த்த கொவிகம என்ற உயர்சிங்களவர்களில் கணிசமான தொகையினர் சோழப் படையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் வட பகுதியில் கும்பல் கும்பலாகக் குடியமர்த்தப்பட்டனர் என எழுதியிருந்தேன்.
அவர்கள் தமது வழிபாடுகளுக்காக ஏற்படுத்திய பௌத்த சின்னங்கள் சிதைவுற்ற நிலையில் வடபகுதியில் ஆங்காங்கே உள்ளன.தமிழரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக அரசியல் செய்யாவிட்டால,; வடபகுதியில் சிங்கள வம்சாவழியினர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனவே அங்கும் சிங்களவர்களுக்கு வாழும் உரிமை உண்டு என்று சிங்கள ஆய்வாளர்கள் சொல்லும் நிலை தோன்றப் போகின்றது என்று எழுதியிருந்தேன்.

வட கிழக்கில் அதுவும் வடக்கில் வாழும் தமிழ் மக்களில் ‘கோ’ எனத் தொடங்கும் பிரிவினரும்.சிங்களப் பிரிவினரில் ‘கொ’ எனத் தொடங்கும் பிரிவினரும் ஒன்றேயாகும்.
‘கொ’வின் வம்சாவழியினரே ”கோ’ராகும்.இந்தக் ‘கோ’வினர்தான் பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள்.காலப் போக்கில் இவர்கள் தமிழர்களாக மாறித் தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் வம்சாவழித் தன்மை காரணமாக பெரும்பாலான இவர்களிடம் சிங்கள மக்களிடம் காணப்படும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் உண்டு.
கடந்த காலங்களில் வடபகுதியில் சாதிக்கலவரங்கள் ஏற்பட்ட போது இந்தக் ”கோ’வினர் ,’வெ’யினரால் தூண்டப்பட்டுச் சன்னதம் ஆடியவர்கள்.
இலங்கைத் தமிழ் சரித்திர வரலாற்றாய்வளர்களுக்கு இந்த உண்மை நன்றாகத் தெளிவறத் தெரிந்த போதும் அதைக் கண்டும் காணாதிருப்பது போன்ற பாசாங்கு செய்வதும் அல்லது மூடிமறைக்கவும் முயற்சிக்கின்றார்கள்.தமிழர்களும் பௌத்த மதத்தைத் தழுவியவர்களே எனச் சொல்ல தமிழ் வரலாற்றுப் பேராசிரியர்கள் தயங்குகிறார்கள்.
தமிழ் வரலாற்றாய்வாளர்களிடம் காணப்படும் குறைபாடு என்னவெனில் உண்மையான உண்மையைச் சொல்லத் தயங்குவதுதான்.ஒரு சிங்கள இனவாதப் பேராசிரியர் அல்லது வரலாற்று ஆய்வாளர் வரலாறு சம்பந்தமாக உண்மையைச் சொன்னால்,அந்தச் சிங்கள வரலாற்றாய்வாளர் ஒரு இனவாதியும் என்பதால்,இனவாதிகள் இப்படித்தான் சொல்வார்கள் என அவர் சொல்லும் உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பது கல்விக்கழகல்ல.
இது ஒருபுறமிருக்க இராவணன் பற்றிக்கூட வெளிப்படையாக சிங்கள வரலாற்று
ஆய்வாளர்கள்,நம்முடைய மன்னன் என்று சொல்ல இலங்கையின் வரலாற்றையறிந்த தமிழ் வரலாற்றாய்வாளர்கள் பேராசிரியர்கள் இராவணன் பற்றிய உண்மையைச் சொல்லத் தயங்குவதைக் காண முடிகின்றது.உண்மைகள் எதுவோ அதை ஏற்றுக் கொள்வதே நீதியாகும்.
இதன் தொடர்பாக இன்னொரு விடயத்தையும் இதவும் வரலாற்றோடும் மக்களோடும் தொடர்புடையது என்பகதற்காக இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகின்றேன்.
இலங்கை யாழ் வலிவடக்கு நிர்வாகப் பகுதியில் உள்ள ஊரான தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் அம்பனை வயல்வெளியின் தெற்கு எல்லையில் மல்லாகம் குளமாங்காலோடு அண்மித்த பகுதியில் எல்லையாகக் காணப்படும் பெரும் வெள்ளவாய்க்கால் மிகப்பழைய காலத்திலிருந்தே வழுக்கையாறு என அழைக்கப்பட்டதும்,எழுத்தாளரரும் பூமிசாஸ்திர பட்டதாரியும் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றியவருமான செங்கையாழியான் எனப் புனைபெயர் கொண்ட திரு.குணராசா அவர்கள் அவ்வெள்ளவாய்க்காலை வாழி வழுக்கையாறு என ஒரு எழுத்துநடைக் கவிதை எழுதியதை நான் முன்பு வாசித்திருந்தேன்.
ஒருசில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தியொன்றில் அச்சுவேலியில் ஆரம்பித்து வசாவிளான்,கட்டுவன் ஆகிய ஊர்களுக்கூடாகச் சென்ற தெல்லிப்பழைச் சந்தியைக் கடந்து மேற்குப்புறமமாகச் செல்லும் பண்டத்தரிப்பு வீதிக்குச் (இப்பொழுது இந்த வீதி அராலிவரை செல்லும் வீதியாக பெயரிடப்பட்டுள்ளது)சமாந்தரரமாச் சென்று அம்பனைச் சந்திக்கப்பால் இடதுபுறமாக பனங்காணிகளுக்கூடாகச் நாகதம்பிரான் குளத்தைச் சென்றடையும் வெள்ளவாய்க்காலை ஒரு கல்வியாளர் வழுக்கையாறு எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் தெரிவித்த தகவல் தவறு என அவரின் முகநூல் பதிவுக்குகீழ் எனது கருத்தை எழுதியிருந்தேன்.அவர் அதற்கு எந்தப் பதிலுமே எழுதவில்லை.
கல்வியாளர்களில் பெரும்பாலானவர்கள் தாம் சொல்லும் கருத்துக்களோ,தகவல்களோ மிகச் சரியானவையாகத்தான் இருக்கும் என நம்புவதுடன்,அதை மறுத்து தரவுகள் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் ஒருவர் தனது கருத்தை முன் வைத்தால் தவறை ஏற்றுக் கொள்வது கௌரவக்குறைச்சல் என நினைத்து தான் சொல்வதை நம்புமாறு நிர்ப்பந்திக்கும் நோக்குடன் சுற்றிவளைத்து வாதாடும் போக்கு அவர்களிடமிருக்கிறது.வேறொரு சந்தர்ப்பத்தில்,இன்னொரு உரையாடலில்,இன்னொருவர் கருத்தை மறுக்கையில் நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே எனவும் அவர்களே சொல்வதுமுண்டு.
இலங்கை தென்பகுதியில் இராவணன் ஆட்சி செய்ததாகக் கருதப்படும் இடங்கள்,தொல்லியல் சான்றுகள் போன்றவற்றைச் சிங்கள மக்கள் கொண்டாடுகிறார்கள்.தமிழ் மன்னன் சைவத்தைத் தழுவியவன் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டு தமது நாட்டு மன்னன்தான் உலகின் முதல் ஆகாய விமானம் தயாரித்த விஞ்ஞானி எனப் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஆனால் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள்,ஆரியர்களால் இட்டுக்கட்டப்பட்ட பெயரான இராவணன் பத்துத் தலை கொண்ட அரக்கன் என்ற சொல்லை நம்பிக் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
இராவணனின்: பத்துவிதமான ஆற்றலை,அந்த ஆற்றலின் இரப்பிடமான மூளையையும் மூளை இருக்குமிடமான தலையையுந்தான் பத்துத் தலையென குறிப்பிட்டனர் என்பதுதான் உண்மையெனினும் அதைத் தெளிவாகத் தெரிந்தும்,சரித்திர,வரலாற்றாய்வாளர்கள் பத்துத் தலையும் நீளமான இருபக்கவாயிலுமுள்ள பற்கள் ஆரிய வரலாற்றாசிரியர்களால் திட்டமிட்டு எழுதப்பட்டு,இராவணனை அரக்கனான ஏற்றுக் கொள்ளும் இசைவாக்கத்தைப்பெற வைத்தனர் என்று எந்தவொரு சரித்திர வரலாற்றுப் பேராசிரியர்களும் துணிவுடன் கூறத் தயங்குகிறார்கள்.
ஆனால் சிங்களவர்கள் பெருமிதத்துடனும், பெருமகிழ்ச்சியுடனும் இராவணன் எமது நாட்டின் சக்கரவரத்தியென்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இலங்கைத் தமிழ் வரலாற்று அறிஞரர்கள்,வடக்கில் சிங்களக் கொவிகம பரம்பரையினரின் தமிழர்களாக மாறி வாழ்கின்றனர் என்பதை வெளிப்படையாகச் சொல்வதும்,தமிழர்களும் குறிப்பாக சைவசமயத்தைத் தழுவம் தமிழர்களும் புத்தமதத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் என்பதையும் சொல்லி அது போலத்தான்,சிங்களவர்கள்: பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவிட்டார்கள் என்பதையும் சொல்லலாம்.
நிரூபணமாக ஒரு விடயத்தை இங்கே பதிவு செய்கிறேன்.எனது தங்கை சில நாட்களுக்கு முன்பு,தனது மகளையும் எங்களையும் பார்ப்பதற்காக கனடாவிலிருந்து வந்திருந்தாள்.
அவள் சிலாபத்திலேதான் வாழ்ந்தவள்,அங்குதான் படித்தவள்,சிங்கள மொழியை பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் அவளுக்குத் தெரியும்,அங்குள்ளவரையே திருமணம் செய்தவள்.
அவள் வீட்டுக்கு வந்த போது சிலாபத்து நிலவரம் பற்றிக் கதைக்கையில் சிலாபம் இப்பொழுது முற்றுமுழுதாக சிங்கள மயமாகவே மாறிவிட்டது.கடற்கரை ஊர்கள் யாவும் இப்பொழுது சிங்கள ஊர்களாகிவிட்டன என்றாள்.
நானும் சிலாபம் கொச்சிக்கடையென ஐந்து வருடங்கள் அங்கு இருந்தவனாகையால் ஒவ்வொரு விடயமாகக் கேட்க,அவளும் விபரமாகச் சொன்னாள்.
தங்கையின் கணவனின் அண்ணன் தம்பியின் பிள்ளைகளே சிங்களத்தில் படித்து சிங்களவர்களாகவே மாறிவிட்டார்கள்.
(இது போலத்தான் தமிழறிஞர்கள் தையிட்டி விகாரை கொவிகமவினரால் வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தியதை ஏற்றுக்: கொள்கிறோம்.ஆனால் பக்கத்துக் காணிகளை அபகரித்ததை எதிர்க்கிறோம் எனச் சொல்ல வேண்டும்.)
அந்த முறைமையை விட்டிட்டு விகாரையை இடிக்க வேண்டும் என்பது மிகத் தவறான அணுகுமுறையாகும்.
ஏதாவது ஒரு கொதிநிலை இருக்க வேண்டும்,காலத்துக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படக்கூடாதென்பதிலேதான் தமிழரசியல்வாதிகள் கவனம் செலுத்துகிறார்களோ எனச் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
தமிழர்களாக மாறிய கோவிகமவினரின் பரம்பரையினர் சுண்ணாகம், சங்கானை, அச்சுவேலி, தெல்லிப்பழை, தையிட்டி, தொல்புரம், சாவகச்சேரி, கொடிகாமம்,சுளிபுரம், கரவெட்டி, கரனவாய், யாழ் ஈச்சமட்டை,தெல்லிப்பழைப் புதுத்தோட்டத்தில்,தெல்லிப்பழை நீலாவத்தை (வத்தை) பத்தாவத்தை (வத்தை) சுண்ணாகம் சூராவத்தை(வத்தை) வாழ்கின்றனர்.இவர்களின் குணவியல்புகளை உற்றுக் கவனித்தால் சிங்களவர்களின் குணவியல்பகளுக்கு ஒத்ததன்மையுடன் இருப்பதைக் காணலாம்.
இது தவிர்ந்து வடக்கு மாகாணத் தமிழர்கள்,தமிழகத் தமிழர்களுடன் ஒத்துப் போவதைவிட கேரள மலையாளிகளுடன் ஒத்துப் போவதைக் காண முடிகின்றது.
சிங்கள இனவாதிகள்,சிங்கள மதவாதிகள் சொல்கிறார்களே என்பதை மதவாதிகளும்,இனவாதிகளும் இப்படித்தான் சொல்வார்கள் என உண்மைகளைக் கல்வியாளர்கள் மூடிமறைக்கக்கூடாது.

சிங்கள கல்விமான்களுடன் கலந்துரையாடுகையில் வடபகுதியில் தமிழர்களாக மாறி வாழம் சிங்களவரின் வரலாற்றையும்,அதே போல சிங்கள ஊர்களில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாறியமையையும் எடுத்துரைக்க வேண்டும்.
இக்கட்டுரைக்கு இன்னும் ஒரு சான்றாக,கொழும்பிலிருக்கும் மருத்துவரும் எனது மருமகளுமான திருமதி.செல்வரஞ்ஜனி சுப்பிரமணியம் அண்மை மாதங்களில் நெய்தல் நடை என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.
அவர் ஆர்பத்தில் சிலாபம் கருக்குப்பனை (கடற்கரைச் சந்தியிலிருந்து வடக்குத் திசை) என்ற குறிச்சியிலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் படிப்பித்தவர்.; ,இப்பொழது அந்தப் பள்ளிக்கூடம் முற்றுமுழுதாகச் சிங்களப் பள்ளிக்கூடமாக மாறியதுடன்,அங்கு படித்தவர்கள் இப்பொழுது குடும்பஸ்தர்களானதுடன் அங்கு அனைவருமே சிங்களவர்களாக மாறிவிட்டனர் என்ற விபரம் அந்த நூலில் உள்ளது.
அவர்கள், சிங்களவர்களாக மாறியதை அவர்கள் ஒரு இடராகவே நினைக்கவில்லை.இலங்கை ஒரு கலப்பின நாடுதான்.இலங்கையை அதற்குரிய பன்முகத்தன்மையுடனேதான் பார்க்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ,கல்வியாளர்களுக்கும், மதவாதிகளுக்கும் உண்மைகள் தெரிந்த போதும் அவற்ற மூடிமறைத்து வரலாற்றுத் துரோகத்தைச் செய்வதாகக் கருதுகிறேன்.
![]()