நிகழ்வுகள்
நல்லூரிலிருந்து வெடுக்குநாறிமலை ஆலயம் நோக்கித் தரிசன யாத்திரை

மாசிமக விரத நாளை முன்னிட்டு இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் வரலாற்றுப் புகழ்மிக்க வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் நோக்கிய ஆன்மீகத் தரிசன யாத்திரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 6 மணியளவில் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து பஜனை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் பங்கேற்றுத் தரிசன யாத்திரையை ஆரம்பித்து வைத்தார்.
தரிசன யாத்திரை வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் விசேட பொங்கல், பஜனை மற்றும் மகேஸ்வர பூஜை வழிபாடுகளில் பங்கேற்றனர்.
![]()