இலங்கை

அமெரிக்காவுக்கு அரசு அஞ்சக்கூடாது; கண்டிக்க வேண்டும் என்கிறார் சஜித்

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் தவறு எனத் தெரிவிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒருபோதும் அச்சமடையப்போவதிலில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அந்நியச் செயலாவணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இறையாண்மையுள்ள நாடான ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் . ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை மீறும் செயல் . அதனால் இந்த தாக்குதல் தொடர்பில் ஒட்டுமொத்த இலங்கைப் பாராளுமன்றமும் கண்டிக்க வேண்டும் என பிரேரிக்கின்றேன்.

அதேநேரம் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை அரசாங்கமும் கண்டித்து அறிவிப்பு விடுக்க வேண்டும். அதற்கு பயப்படத் தேவையில்லை. அதேநேரம் ஈரானும் பதிலடியாக மத்திய கிழக்கில் கட்டார், குவைட், ஐக்கிய அரபு ராஜ்ஜியம். பஹ்ரைன், சவூதி போன்ற சுற்றியுள்ள நாடுகள் மீது மேற்கொண்ட தாக்குதலையும் நாங்கள் கண்டிக்கிறோம்.

இந்த யுத்தம் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலையில் நாங்கள் நாடு என்றவகையில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அதனால் இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் பிரித்துப்பார்க்காமல் இந்த நிலைப்பாட்டை எமது நாட்டின் நிலைப்பாடாக வெளிப்படுத்துவது முக்கியம்.

எனவே ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் தவறு என தெரிவிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஒருபோதும் அச்சமடையப் போவதில்லை என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *