ஆகாயப்பந்தல் 11 …. ஏலையா க.முருகதாசன்

வீட்டின் மணி அடிக்க கதவைத் திறக்கிறார் மகேந்திரராஜா. அங்கே அவர்களின் உறவினர்களான தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியும் நிற்பதைக் கண்ட மகேந்திரராஜா வியப்புடனும் மகிழ்ச்சியுடனம் வாரங்கள் வாருங்கள் என முகமலர்ச்சியுடன் சொல்கிறார்.
தனது கணவர் யாரை இவ்வளவு உற்சாகமாக வரவேற்கிறார் என அந்த தாழ்வாரப் பந்hதியில் நின்ற இடத்திலிருந்தே கழுத்தைத் திரப்பிப் பார்க்கிறார் சசிகலா.
சசிகலாவின் கணவர் மகேந்திரராஜா முன்னால்வர அவர்களின் பின்னால் தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியும் தாழ்வாரப் பந்தியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியும் கூடத்தின் மையப் பகுதிவரையும் வந்தவர்கள் கூடத்துக்கு வெளியே பந்தி போன்று இறக்கிய தாழ்வாரத் தோற்றம் கொண்டு ப வடிவில் சீமெந்தில் கட்டிய அரைச்சுவரில் சாரிணியும் மதுசாவும் எறி இருப்பதையம்,கொஞ்சம் தள்ளிச் சரவணன் கதிரையைப் போட்டு உட்கார்ந்திருப்பதையும்,சசிகலா மதுசாவின் முழங்கைக்கும் தோள்பட்டைக்குமிடையில் தனது கையைக் கோர்த்தபடி இருப்பதையும் கூடத்தின் ஜன்னல் வழியாக ஒரே பார்வையில் கண்டுவிடுகின்றனர்.
அந்த விநாடியே யார் இந்த அழகான இளம்பெண்,இவள் நிச்சயமாக எங்களுடைய கிரக மக்களோடு சம்பந்தப்பட்டவளாக இருக்க முடியாது.அதற்கான எந்தச் சாயலும் அவளின் முகத்திலோ உடல்வாக்கிலோ தெரியவில்லை,அப்படியிருக்க சசிகலா எதற்காக அவளின் கைகளுக்குள் தனது கைளைச் புகுத்தி ஆதரவாக பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடி பூரணேஸ்வரி கூடவெளிக்கதவை திறந்து கொண்டு வெளியே வர தர்மசிங்கமும்,அவருக்குப் பின்னால் மகேந்திரராஜாவும் வருகின்றனர்.
தர்மசிங்கத்தையும் பூரணேஸ்வரியையும்; கண்டதும்,கதிரையை விட்டெழுந்த சரவணன் வாருங்கள் என ஏதோ முறை சொல்லி அழைக்க எத்தனித்தவன் மதுசா இருப்பதால் வாய்வரை வந்த சொற்கள் வாயைவிட்டு வெளியே வராதவாறு அடக்கிக் கொண்டு இதில் இருங்கள் அங்கிள் என்று சொன்னவன்,அன்ரி பொறுங்கோ இருக்கிறதுக்கு கதிரைளைக் கொண் வருகிறன் என்று சொல்லிக் கொண்டே கதிரைகளை எடுத்துவர உள்ளே போகிறான்.
அரைச்சுவரில் உட்கார்ந்திருந்த சாரிணியும் மதுசாவும் தங்களைவிட வயதில் பெரியவர்கள் நிற்கும் போது தாங்கள் உயரத்தில் இருக்கக்கூடாது என்ற கீழ்ப்படிவு காரணமாக குதித்து இறங்குகின்றனர்.

இதுவரை நேரமும் மதுசாவின் கைகளுக்குள் தனது கையைக் கொடுத்து ஆதரவாக கோர்த்துப் பிடித்திருந்த சசிகலா மதுசா அரைச்சுவரிலிருந்து குதித்து இறங்கியதும் கோத்திருந்த தனது கைகளை விடுவித்துக் கொண்டே வாருங்கள் என தர்மசிங்கத்தையும் பூரணேஸ்வரியையும் வரவேற்கிறாள்.
உள்ளே போன சரவணன் மூன்று கதிரைகளை ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து அந்தப் பந்தி போன்ற இடத்தில் போடுகிறான்.கொண்டு வந்த மூன்று கதிரைகளும் தனக்கும்,பூரணேஸ்வரிக்கும்,தனது மனைவிக்கும் என்பதால் எல்லாரும் இருந்து கதைப்போமே,இன்னும் கதிரைகள் வேணுமென்கிறாள்.
இருப்பதற்கு இன்னும் கதிரைகள் தேவையென்பதால் கதிரைகளை எடுக்கப் போன சரவணனிடம்,நீங்கள் இருங்கள் நான் போய் எடுத்து வருகிறேன் என்ற போது நானும் வருகிறேன் எனச் சரவணன் சொல்ல அப்பொழுது சசிகலாவினதும் பூரணேஸ்வசரியின் கவனத்தை ஈர்ப்புது போல ஒரு சம்பவம் நடக்குது.
நீங்கள் போக வேண்டாம் நானும் போய் எடுக்கிறேன் என்பதை மதுசா வாயால் சொல்லாமல் சரவணனுக்கு கட்டளையிடுவது போல் மதுசாவின் கண்கள் பிரகாசமாக மாறி அதிலிருந்து ஒளி வருவது போல வர சரவணனும் மதுசாவின் கண்களுக்குக் கட்டுப்பட்டு நின்று விடுகிறான்.
சசிகலா,மதுசா தனது வீட்டுக்கு மருமகளாக வரவேண்டுமென்று விரும்பியிருந்தாள்.தமது குடும்ப விருப்பத்தை மதுசாவின் பெற்றோர் விரும்ப வேண்டுமே என சஞ்சலப்பட்டவளுக்கு மதுசாவின் கண்கள் தனது மகனின் கண்களுடன் பேசிக் கொண்டதைப் பார்த்ததும் தான் எடுக்கப் போகும் முயற்சியில் அரைவாசி குறைஞ்சுவிட்டதாக ஒரு நிம்மதி அவளுக்க ஏற்பட்டது.
மதுசாவை முற்றுமுழுதாக காலிலிருந்து முகம் வரை பார்த்து தனது பார்வையாள் அளந்த பூரணேஸ்வரி ஒரே பார்வையில் இந்த அழகான பெண் எமது கிரகத்தோடு சம்பந்தப்பட்டவள் அல்ல உறுதிப்படுத்தியவள்,மதுசாவின் கண்ணொளியில் வந்த கட்டளையைப் பார்த்ததும் இவள்தான. சரவணனுக்கு மனைவியாகப் போகிறாள் எனத் தான் தீர்மானித்ததை சசிகலாவைப் பார்த்து தனது ஊகத் தீர்மானத்தை கண்களால் வினவ சசிகலாவும் ஒம் என்பது போல் கண்களாலேயே பதிலளிக்கிறாள்.
நீங்கள் கதைச்சுக் கொண்டிருங்கள் நான்: ரீ போட்டுக் கொண்டு வாறன் என்று கசிகலா அடுப்படியை நோக்கிப் போக,பூரணேஸ்வரியும் நானும் வாறன் என்று சசிகலாவுடன் போகிறாள்.
பூரணேஸ்வரி சசிகலாவுடன் போவது,சசிகலா ரீ போடுவதற்கு உதவி செய்வதற்கல்ல தன் மனதில் நினைச்சதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கே.
என்ன சசி மருமகளைத் தேடிப்பிடிச்சிட்டாய் போல என பூரணேஸ்வரி கேட்க,அவள் அப்படிக் கேட்டதை மனதுக்குள் இரசித்தபடியே குனிஞ்;ச தலை நிமிராமல் கீழே பார்த்தவாறு பற்கள் தெரிய சிரிச்;சுப் பூரிப்படைந்ததைக் கவனிச்;ச பூரணேஸ்வரி,எவ்வளவு சந்தோஷம் உனக்கு,எல்லாம் சரிதான் அந்தப் பிள்ளையின்ரை தாய்தகப்பன் நம்மைப் போல இல்லையே,நாங்கள் பூமி மனிதர்கள் என மற்றவர்கள் நம்பும்படி இந்த நகரத்தில் வாழுகிறோம்,எங்கள் கிரக ஆட்கள் இன்னும் பத்துக் குடும்பங்கள் மட்டுமே ஜேர்மனியில் அதிலும் அனைவரும் இந்த போகும் போகும் நகரில் வாழுகிறோம் எவருமே நாங்கள் வேறு கிரகத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என இதுவரை சந்தேகப்படவில்லை என்ற பூரணேஸ்வரி,சசி இஞ்சை பார் நான் உன்னைப் பயப்படுத்த வேண்டுமென்பதற்காக இதைச் சொல்லவில்லை ஆனால் ஒரு விசயம் இதில் முக்கியம்,அமெரிக்காவில் உள்ள பிரபஞ்ச ஆராய்ச்சியாளர்களான நாஸாவே ஜேர்மனியில் வேற்றுக் கிரகத்தினராகிய நாங்கள் வாழ்வதை இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை.அனால் அவர்களின் செய்திகளில் பூமியில் வேற்றக்கிரக வாசிகள் பூமி மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள் எனச் சந்தேகிக்கிறோம் எனச் அவர்களின் செய்திகளில் அச்சந்தேகங்களை வெளயிட்டு வருகிறார்கள் என்கிறாள்.
எங்களை எமது கிரகத்தினர் இங்கே அனுப்பிய போது நியூசிலாந்திலிருந்து வந்தவர்களாக மூடிமறைச்சு அனுப்பினார்கள்.அதுவும் நாங்கள் பத்துக் குடும்பங்கள் மட்டுந்தான் இப்போதைக்கு எங்களுடைய கிரகத்தால் அனுப்பப்பட்டவர்கள்.நாங்கள் நியூஸலாந்துக்கு அப்பாலிருக்கும் தென்துருவத்தில் உள்ள ஒரு இடத்துடந்தான் தொடர்பிலிருக்கிறோம் எங்களுடைய கிரக மனிதர்கள் போல பூமி மனிதர்களும் இருப்பதால் யாருக்குமே எங்கள் மீது சந்தேகம் வரவில்லை.நாங்கள் அனைவரும் இங்கே அவரவர்க்கென ஒவ்வொரு வேலைகளைச் செய்து கொண்டே பூமி மனிதர்களின் வளர்ச்சிபற்றியும்,அவர்களின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றியும் இரகசியத் தகவல்களை எங்களுடைய கிரகத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
எம்மில் யாருக்குமே எந்தச் சந்தேகமும் வரவில்லை எனப் பூரணேஸ்வரி சொல்லிக் கொண்டிருப்பதற்கு எந்தப் பதிலுமே சொல்லாமல் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே தேநீர் போட்டுக் கொண்டிருந்தாள் சசிகலா.
ஆனால் பூரணேஸ்வரி கதைக்கிறதை நிறுத்தாமல் தொடர்ந்தாள்,இந்தச் சூழ்நிலையில் எங்கடை கிரக வாழ்வுக்கும்,பூமியிலுள்ள மனிதர்களின் வாழ்வுக்குமிடையில் உறவுக்குமிடையிலும்; பிரச்சனைகள் ஏற்படாதா,சரி அப்படி எல்லாத்தையும் சமாளித்து சரவணனுக்கும் அந்தப் பிள்ளைக்குமிடையில் திருமணம் செய்து வைக்க,அந்தப் பிள்ளையின் தாயதகப்பனுடன் கதைக்க வேண்டி வந்தால் நாங்கள் பூமி மனிதர்கள் அல்ல என்பதைச் சொல்லித்தானேயாக வேண்டுமென்ற என்று மளமளவெனக் கதைச்ச பூரணேஸ்வரியை இடைநிறுத்திய சசிகலா,அதையம் இதையும் சொல்லி என்னைப் பயமுறுத்தாதை,இதைப் பிறகு கதைப்பம் இப்ப அங்கை போயிருந்து வேறு ஏதாவது கதைப்பம்.அங்கை வந்து சாடைமாடையாகத்தன்னும் நாங்கள் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளாதை,மதுசாவுக்கு எதுவுமே தெரியாது வா என்று பூரணேஸ்வரியின் தோளில் கைவைச்சிச் சொன்னவள்,தேநீர்ப் பேணிகளை அடுக்கி வைச்சிருந்த தட்டிலிருந்து பூரணேஸ்வரிக்கு ஒரு தேநீர்ப் பேணியை எடுத்துக் கொடுக்க அவள் குடிச்சபடி சசிகலாவுடன் கூடத்திற்கு வெளியே இருக்கும் தாழ்வாரப் பந்தியை நோக்கி சசிகலாவுடன் போய்க் கொண்படிருந்தாள்.
கணவன் மனைவியான மகேந்திரராஜா சசிகலாவும் அவர்களின் பிள்ளைகளான சரவணனும் சாரிணியும் வளர்த்துவரும் அந்த விசித்திரமான அந்த இரண்டு பறவைகளுக்காக வீட்டுக் கூடத்தின் வெளியே தாழ்வாரமாக இருந்த பந்தியை கொஞ்சும் அகலமாகக் கட்டியிருந்தார்கள்.
பறவைகள் இரண்டும் அந்தப் பந்திக்குள் நடப்பட்டிருக்கும் காய்ந்த மரக் கொப்பில் இருப்பதும்,திடீரென எழுந்து பறந்து முகில்கூட்டங்களையும் கடந்து கண்ணிலிருந்து மறையுமளவுக்குப் பறப்பதும் மீண்டும் தமது இருப்பிடத்துக்கு வருவதுமாக ஒருநாளைக்குப் பத்துத் தடவையாவது அவ்வாறு மேலே பறப்பதும் வருவதுமாக இருந்தன.பறவைகள் மேலே பறப்பது அங்கே தமக்கான இரையை உண்பதற்குத்தான்.
அந்த பறவைகளுக்கான அந்த இடத்தை, தங்களின் ஓய்வு நேரங்களில் இருந்து கதைப்பதற்கு ஏற்றவாறும் அழகுபடுத்தியிருந்தார்கள்.

தேநீரோடு வந்த சசிகலா எல்லாருக்கும் தேநீரைக் குடுக்க என எத்தனிக்கையில், மதுசா என்னட்டைத் தாருங்கள் மாமி என்று சொல்லிக் கொண்டே சசிகலா வைச்சிருந்த தேநீர்த்தட்டை நோக்கிக் கையை நீட்ட,அனைவுரின் கண்களும் மதுசாவையும் சசிகலாவையும் நோக்கிக் குத்திட்ட நின்றன,சரவணனும் அர்த்தம் பொதிந்த புன்சிரிப்புடன் பார்க்க,சாரிணி; மாமி என யாருக்கோ சொல்வது போல கைகள் இரண்டையும் கதிரையின் இருபக்க கைபிடிகளில் வைச்சு கொஞ்சம் தோளை ம் எனச் சொல்லி மெதுவாகச் செருமினாள்.
அங்கிருந்த மகேந்திரராஜா,பூரணேஸ்வரி,தர்மசிங்கம்,சரவணன் என எல்லாரும், தான் மாமி என்று சொன்னதைக் கேட்டதும் தலைநிமிர்த்தி தன்னைக் குத்திட்டுப் பார்ப்பதைக் கண்டதும் ஐயையோ சொறி சொறி என்னையறியாமல் மாமி என்று சொல்லிட்டன் அன்ரி சொறி என்று சசிகலாவிடம் சொல்ல,நீங்கள் எப்பவும் என்னை மாமியென்றே கூப்பிடலாம் அப்படிக் கூப்பிடுவதைத்தான் நானும் விரும்புகிறன் என்றவள் உங்களுக்கு எப்பவும் நான் மாமியாகவே இருக்க ஆசைப்படுகிறன் என்கிறாள் சசிகலா.மதுசா மாமி என்று சொன்னதும் என்றம் மாமியாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சசிகலா சொன்னதும் தானாகவே வாயிலிருந்து வார்த்தைகள்தான்.
சசிகலா அப்படிச் சொன்னதும் என்னையேன் மாமி நீங்கள் என்று சொல்லிக் கதைக்கிறியள்,நானும் சாரிணியும் ஒரே வயதாக்கள்தானே நீ என்று கூப்பிடலாந்தானே என்று மதுசா தன்னடக்கமாகச் சொன்னதும்,நாங்கள் எங்கடை பிள்ளைகளுடன்கூட நீங்கள் என்றுதான் கதைப்பம் அது எங்கடை கிரக என்று சொல்ல முற்பட்ட சசிகலா பாதியிலேயே நிறுத்திவிடுகிறாள்.
மதுசா சசிகலாவிடமிருந்து தேநீர்;க் கோப்பைகளிருந்த தட்டை வாங்கி ஒவ்வொருவராக தேநீரைக் குடுத்துவிட்டு வந்து அமர அவளுக்கு அவளின் கைத்தொலைபேசிக்கு தாயிடமிருந்து அழைப்பு வருகின்றது.
தாய் கதைப்பது அவளின் கைத்தொலைபேசியிலிருந்து எல்லாருக்கும் கேட்கிறதுஈ
எப்ப வருவாய், தாய்
கொஞ்சத்தால வந்திடுவனம்மா, மதுசா
மத்தியானச் சாப்பாட்டுக்கு வருவாய்தானே, அம்மா
ஓமம்மா வந்திடுவன்
மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திடுவன் என்று மதுசா சொன்னதும் சசிகலா, மருமகளே இங்கைதான் நீங்கள் மத்தியானம் சாப்பிடப் போறியள்,சமையல் முடிஞ்சுது.எங்கடை சமையலைச் சாப்பிட்டுப் பாருங்களேன் அது புதுருசியாக இருக்கும் என்று தான் மருமகள் என்று சொன்னதை மதுசாவின் தாய கேட்டிருப்பாரோ என யோசித்தவர்,அம்மாவோடை எனக்கும் கதைக்க ஆசை ரெலிபோனைத் தருவியளா எனக் கேட்க மதுசா சசிகலாவிடம் கைத்தொலைபேசியைக் கொடுக்கிறாள்.
சசிகலா மதுசாவை மருமகளே எனச் சொல்லிக் கதைத்தது மதுசாவின் தாய்க்கு அவரின் தொலைபேசி வழியாகக் கேட்கவே தனது மகளைத்தான் சரவணனின் தாய் மருமகளே எனச் சொல்லிக் கதைத்திருக்கிறார் என ஊகிக்கிறாள் மதுசாவின் தாய்.
மதுசாவின் தாயிடம் கதைக்க ஆசையென விரும்பி மதுசாவிடமிருந்து கைத்தொலைபேசியை வாங்கி கலோ என தொலைபேசி வழியாக மதுசாவின் தாயை அழைக்க சில விநாடிகள் மதுசாவின் தாய் பதில் எதவும் சொல்லாமல் இருப்பதை,சசிகலாவின் முகம் போன போக்கிலிருந்து உணர்ந்து கொண்ட அங்கிருந்த ஒவ்வொருவரும் மதுசாவின் தாய் என்னமாதிரி பிரதிபலித்திருப்பார் என யோசிக்கும் போதே மறுமுனையிலிருந்து,குரலின் வித்தியாசத்திலிருந்து இது மதுசா அல்ல என்பதை உணர்ந்த மதுசாவின் தாய் கலோ யார் கதைக்கிறீர்கள் என்று கேட்க,சசிகலா நான்தான் சரவணனின் அம்மா என்று சொல்லி வணக்கம் எப்படியிருக்கிறீர்கள்,உங்கள் குடும்பத்தை ஒருமுறை நாங்கள் வந்து பார்க்க ஆசைப்படுகிறம் என்றவள்,மதுசா மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டதும் நாங்கள் கூட்டிக் கொண்டு வாறம் என்கிறாள்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாரிணி அண்ணை மட்டுந்தான் உங்களுக்கு ஒரு பிள்ளையா நானுந்தானே சரவணனினதும் சாரிணியினதும் அம்மா என்று சொல்லியிருக்கலாந்தானே எனச் செல்லக் கோபத்துடன் கேட்க,சாரிணி கேட்டது மதுசாவின் தாய் சகுந்தலாவுக்கு கேட்க,உங்கள் மகளா இப்ப கதைச்சது உங்களுக்கு இரண்டு பிள்ளைகளா என்று மதுசாவின் தாய் சகுந்தலா கேட்க,அமோ என்று சொல்ல எத்தனித்த சசிகலா தன்னைக் கட்டுப்படுத்தி ஓம் என்கிறாள்.
ஓம் என்பது அவர்களின் கிரக பேச்சுமொழியில் அமோ என்பதாகும்.அமோ என்று சொல்லும் முதல் எழுத்தை சசிகலா உச்சரிக்கத் தொடங்கவே சசிகலாவின் கணவன் மகேந்திரராஜா,பிள்ளைகளான சரவணன்,சாரிணி வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களான தர்மசிங்கமும்,பூரணேஸ்வரியம் சசிகலாவை நிமிர்ந்து பார்க்கின்றனர்.
(தொடரும்)
![]()