இலங்கை

சலே உட்பட ராஜபக்‌ஷ தரப்பை காப்பாற்ற போடப்பட்டுள்ள பயங்கர திட்டம் அம்பலம்!; அதிரடியாக களமிறங்கவுள்ள குழு

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த விசாரணைகளை தடுப்பதற்கு முயற்சியொன்று நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரேஷ் சலே கைதினை தொடர்ந்து பல் அரசியல் முக்கியஸ்தர்களும் தங்களுடைய எதிர்ப்பினை வெளியிட்டு வந்தனர்.

தற்போது தங்களது பெயரையும் சுரேஷ் சலே கூறிவிடுவாரோ என்ற பயத்தில் அதனை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரனின் குழுவை (கருணா) வைத்து மீண்டும் பிரச்சினைனை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆய்வுகட்டுரையொன்று வெளியாகியுள்ளது.

இவர்கள் ராஜபக்ச தரப்பினருக்காக கருணாவின் வழிகாட்டலால் செயல்படுபவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்சவினருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் இந்த குழு களமிறக்கப்படமு் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *