உலகம்

ஈரான் பேச விரும்புகிறது; ஆனால் மிகவும் தாமதமான கோரிக்கை ; ட்ரம்ப் பதிவு

”ஈரானின் ஆகாய பாதுகாப்பு ,விமானப்படை ,கடற்படை மற்றும் தலைமைத்துவம் எல்லாமே முடிந்துபோன விடயங்கள்.அவர்கள் என்னுடன் பேச விரும்புகிறார்கள்.

ஆனால் அது இப்போதைக்கு மிகவும் தாமதமான கோரிக்கை என்பதை நான் தெரிவித்திருக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்ரேல் – அமெரிக்க கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்த நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பலநாடுகளில் விமான போக்குவத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஆரம்பமான இஸ்ரேல் மற்றும் ஈரான் போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்படி தகவலை பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *