உலகம்

போருக்கு ஆதரவளிக்க மறுத்த பிரித்தானிய பிரதமர்; கடுமையாக சாடிய ட்ரம்ப்

ஈரானுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போருக்கு ஆதரவளிக்க மறுத்ததற்காக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரை, ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஸ்டார்மர் குறித்துப் பேசிய ட்ரம்ப், “அவர் உதவிகரமாக இல்லை… இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இத்தகைய போக்கை நான் காண்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வியத்தகு முறையில் மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இத்தகைய அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று ட்ரம்ப் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கில் தனது போர்களை முன்னெடுப்பதற்கு வொஷிங்டன் இனி பிரிட்டனைச் சார்ந்திருக்கவில்லை என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி சூசகமாகக் குறிப்பிட்டார்.

“இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை, ஆனால் ஸ்டார்மர் உதவி செய்திருக்க வேண்டும், அவர் அதைச் செய்திருக்க வேண்டும்,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *