உலகம்

கட்டார் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், கட்டார் மீது ஈரானால் ஏவுகணைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் கட்டாரை இலக்கு வைத்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகள் நிலைகொண்டுள்ள அல் உதைத் வான்படைத் தளம் மீது ஒரு ஏவுகணை வீழ்ந்துள்ளது.

மற்றொரு ஏவுகணையை கட்டாரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக விண்ணிலேயே சுட்டு வீழ்த்தின.

இந்தத் தாக்குதலில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என கட்டார் அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *