கவிதைகள்
ஆர் தடுக்க வருவாரோ!… கவிதை… ஜெயராமசர்மா

வானிருந்து குண்டு மழை
வளை குடா அதிர்கிறது
ஏன் என்று கேட்பதற்கு
எவருக்கும் துணி வில்லை
ஆணவமே உருப் பெற்று
அழிவு தனைச் செய்கிறது
ஆர் தடுக்க வருவாரோ
அமைதி நிலை நாட்டுதற்கு !
மாண் புடைய மனிதவுயிர்
வதை பட்டு அழிகிறது
வான் வழியே அந்தகனாய்
வருங் கணையும் அழிக்கிறது
யார் பேச்சும் கேட்காது
போர் வெறியே எழுகிறது
போர் வெறியைப் போக்கிவிட
யார் வருவார் இவ்வேளை ?

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()