முச்சந்தி

எரிவாயு சிலிண்டர்களை பெறவும் இலங்கை மக்கள் வரிசையில்; சர்வதேச சந்தையில் உயரும் விலைகள்

யாழ்பாணத்தில் தொடர்ந்தும் சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் ஒரு தொகை லாப்ஸ் (Laugfs) எரிவாயு சிலிண்டர்கள் சாவகச்சேரியில் உள்ள யாழ் மாவட்ட முகவர் நிலையத்தில் நேரடியாக விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் வரிசையில் முண்டியடித்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகளால் இயற்கை எரிவாயுவின் (LNG) விலை சர்வதேச சந்தையில் செங்குத்தாக உயரத் தொடங்கியுள்ளது.

உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (20%) கொண்டுள்ள கத்தார், தனது ஏற்றுமதிக்கு இந்த ஹோர்முஸ் நீரிணையையே பெரிதும் நம்பியுள்ளது.

கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், இந்த விநியோகத் தடையால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

இது சந்தையில் தேவையற்ற தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் உள்ள சில முக்கிய எரிவாயு உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இது ஏற்கனவே நிலவும் விநியோகச் சங்கிலி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் தற்போது குளிர்காலம் முடிவுக்கு வருவதால் தற்காலிகமாக எரிவாயு தேவை குறைந்திருந்தாலும், அங்குள்ள சேமிப்பு இருப்பு (Gas Reserves) மிகவும் குறைவாகவே உள்ளது.

எதிர்வரும் கோடை காலத்தில் குளிரூட்டல் தேவைகளுக்காகவும், அடுத்த குளிர்காலத்திற்கான இருப்பை நிரப்பவும் ஐரோப்பா அதிக எரிவாயுவை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது.

தற்போதைய அதிரடி விலை உயர்வு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த எரிவாயு விலை உயர்வு மின்சாரக் கட்டண அதிகரிப்பு, தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு உயர்வு எனப் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் நேரடிப் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமை சீரடைய சர்வதேச நாடுகளின் தலையீடு அவசியமெனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *