உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை; பலர் உயிரிழப்பு

ஈரானை தொடர்ந்து லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பெய்ரூட்டில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா கொமெய்னி, பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட பல தலைவர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகின்றது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *