உலகம்

குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து

குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில், குறித்த விமானத்தின் இயந்திரம் தீப்பற்றி எரிந்தவாறு கீழே விழும் காட்சி காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அதில் இருந்த விமானி விமானத்திலிருந்து குதித்துப் பாதுகாப்பாகத் தரையிறங்கிய நிலையில் பிரதேசவாசிகள் அவருக்கு உதவியுள்ளனர். எனினும், விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு இயக்குநரின் நிலைமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

அதேவேளை அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலா அல்லது இயந்திரக் கோளாறா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஈரான் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இதுவரை 3 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *