உலகம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்; ஈரான் விவகாரத்தில் சீனாவின் முக்கிய நகர்வு

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வெளியிட்டுள்ளது.

ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தப் பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரானுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள சீனா, தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் ஈரானுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளமை சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *