கட்டுரைகள்

மூன்றாம் உலகப்போர்…  ஏலையா க.முருகதாசன்

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான போரில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்த போதிலும்,இஸ்ரேல் எப்படி பொய்களை உண்மையானது என நம்பும்படி செய்திகளை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புகின்றதோ,கசிய விடுகின்றதோ, இதுவும் அது போல ஒரு வதந்தியாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றிய போதிலும்லஅமெரிக்காவின் இலக்கே உச்ச தலைவரை நோக்கியதுதான் என்பதை ஈரானிய புலனாய்வுத்துறை தனது கவனத்தில் அலட்சியமாக எடுத்து அசண்டையீனமாக இ;ருந்திருக்கின்றதோ அல்லது மொசாட்டின் உளவு வலைப்பின்னலுக்குள் இஸ்ரேலுக்குச் சார்பானவர்களாக மாறி உச்ச தலைவரை காட்டிக் கொடுத்திருக்கலாமோ எனவும் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

இதைவிடவும் இஸ்லாமியக் கடும் சட்டத்துக்கு தாம் கட்டுப்பட்டவர்கள் ,உச்ச தலைவர் போற்றுதலுக்குரியவர் என ஈரான் மக்கள் வெளியில் காட்டிக் கொண்டாலும் நவீன உலகின் போக்கோடு தாமும் சங்கமிக்க வேண்டும் என்ற உள் விருப்பம் ஈரானிய மக்களின் மனதில் ஆழமாக இருக்கின்றது என்பதால் உச்ச தலைவர் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு உதாரணமாக கடந்தகால ஷாவின் புரட்சியையும் அவரின் ஆட்சியையும் சொல்லலாம்.
ஈரானிய உளவுப்படையால் உச்ச தலைவரைப் பாதுகாக்க முடியவில்லைnனில்,ஈரானிய உளவுப்படை மிகப் பலவீனதாக மட்டுமல்ல அப்பிரிவிற்குள் இஸ்ரேலின் மொசாட் ஒற்றர்கள் புகுந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்ய முடிகின்றது,ஈரானிய உளவுப்படைக்குள் நிறைய ஓட்டைகளிருக்கின்றன என்பது உறுதியாகியுள்ளது.

தமது தலைவரை ஈரானிய மக்களால் பாதுகாக்க முடியவில்லையெனில்,ஈரானிய மக்கள் மதராசாக்கள் என்ற மதமயப்படுத்தலை வெறுக்கிறார்கள் என்றும் கருதலாம்.
ஈரானில் பெண்கள் நவீன அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது.கிளிக்கூட்டை இரும்பால் செய்தால் என்ன தங்கத்தால் செய்தால் என்ன வாழும் எல்லை குறுகியதே.அதனால் கிளிக்கு எந்த லாபமும் இல்லை.கிளியைப் பொறுத்தவரை அது சிறைதான்.ஈரானியப் பெண்களும் தங்கக் கூண்டுக்குள்தான் வாழுகிறார்கள்.

நல்ல சத்தான உணவு உடலக்குத் தேவையெனினும் தமக்கான உணர்வுகளை கட்டுப்பாட்டுடன் அனுபவிக்கும் சுதந்திரமும் ஒருவருக்குத் தேவை.தமது வாழ்வின் உணர்வுகளை நேர்மையாக அனுபவிக்க அனுமதியின்றி பெண்களுக்கு கடிவாளம் போடும் மதச்சட்டங்களை உடைக்க சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கும் மக்கள் உலகெங்கும் இருக்கிறார்கள்.

இப்பொழுது ஈரான் அமெரிக்க இஸ்ரேல் போர் அதை உலகிற்கு தெளிவாக காட்டியுள்ளது.கடும்சட்டங்களிலிருந்து விடுபட இப்போரில் ஈரான் தோல்வியடைய வேண்டுமென்றுகூட ஈரான் மக்கள் உள்மனதிலஇ விரும்பலாம்,விரும்புவார்கள்.

ஈரானுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டால் தாம் மரண தண்டனைக்கும் உட்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுக்கு எதிராக இஸ்ரேலுக்கு எதிராக கோஷவேஷம் போடும் பொதுமக்கள் மட்டுமல்ல,புலனாய்வுத்துறை அதிகாரிகளும் சித்தாந்த கோட்பாடு மாற்றத்தையும் ஆட்சி மாற்றத்தையும் விரும்பினார்களானால் உச்ச தலைவரின் இரகசிய இருப்பிடத்தை அவர்களே கசிய விட்டிருக்கவும்கூடும்.

அதற்காக உலகைக் காப்பாற்ற வந்த தேவதூதன் அல்ல அமெரிக்கா.அமெரிக்காவின் சுவி;ட்சிலேயே உலகம் இயங்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது.
தானே உலகச் சண்டியனாகவும் இருக்க விரும்புகின்றது.அமெரிக்கா என்றவுடன் அமெரிக்கா என்ற நாட்டை இயக்குபவர்கள் யூதர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயமே.சவால் விடுகின்ற,அறைகூவல் விடுகின்ற அமெரிக்கத் தற்கால அதிபர் இலுமினாட்டிகளால் இயக்கப்படுபவரே.

டொனால் றேகன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் இரண்டு கைகளிலும் துப்பாக்கி எந்தியகேலிச்சித்திரச் செய்தி ஒன்று பிரசுரமாகியிருந்தது.அது ஈராக்கையும் ஈரானையும் எச்சரிக்கும் செய்தி.

யூதர்கள் இலுமினாட்டிகள் என்ற பெயர் கொண்டு தம்மினத்தை அழித்தவர்களை பலியெடுத்துப் பழிவாங்க வேண்டுமென்பதை சபதமெடுத்து நிறைவேற்றி வருகிறார்கள்.
மனிதர்களின் உளவியலை மூலதனமாக்கி அதன் மீது கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகள் ஊடாக யூதர்கள் உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இவர்கள் ஒரு முடிவை எடுத்தால் அதினின்றும் இன்னொரு தளர் யோசனைக்கு மாறவே மாட்டார்கள்.பாவம் பழிக்கு அஞ்சவே மாட்டார்கள். உலகை ஆள வாளைக் கையிலெடுத்த கெங்கிஸ்தான் போல மதங்களைப் பரப்ப வன்முறையைக் கையிலெடுத்த மதவாதிகள் போலவே உலகைத் தமது கைக்குள் அடக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் கைகோர்த்து நிற்கின்றன.

மூன்றாம் உலகப் போர் மத்திய கிழக்கில் இடம்பெறும் என ஒரு செய்தியை பல மாதங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன்.அது நிஜமாகிறது.

இந்தப் போர் மிகத் தெளிவாகத் திட்டமிட்ட போர் என்பது உண்மையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *