கவிதைகள்

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்!… கவிதை…. பயணம் – 7…..  சங்கர சுப்பிரமணியன்

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே
சுவைக்க சுவைக்க
தமிழ் இனிக்கின்றதே

பருகப் பருக
தாகம் அடங்கலையே
பாலும் தேனுமாய்
அது இருக்கின்றதே

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே

வளமை செழுமை
இருந்த போதும்
எளிமை அதிலே உண்டு

இளமை இனிமை
இருந்ந போதும்
வலிமை அதிலே உண்டு

வலிமை அதிலே உண்டு

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே
சுவைக்க சுவைக்க
தமிழ் இனிக்கின்றதே

பருகப் பருக
தாகம் அடங்கலையே
பாலும் தேனுமாய்
அது இருக்கின்றதே

அன்னைத் தமிழே
அழகுத் தமிழே
அழிவேன் ஒரு நாள் நானும்

அழியா உலகில்
நிலையாய் இருப்பாய்
நிலைபெறு தமிழே நீயும்

நிலைபெறு தமிழே நீயும்

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே
சுவைக்க சுவைக்க
தமிழ் இனிக்கின்றதே

பருகப் பருக
தாகம் அடங்கலையே
பாலும் தேனுமாய்
அது இருக்கின்றதே

நினைக்க நினைக்க
நெஞ்சம் நெகிழ்கின்றதே

சங்கர சுப்பிரமணியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *