இலங்கை

கச்சதீவை இந்தியா கைப்பற்றுமா?

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் இந்த விடயம் தொடர்பில் கதைப்பதானது வாக்குகளுக்காகவே ஆகும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர், கச்சத்தீவை இந்தியா மீள பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் கூறுவது தொடர்பில் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அதன்போது மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவின் ஒரு அடையாளமாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயம் காணப்படுகிறது. இலங்கை மற்றும் இந்திய மக்களின் புனித தலமாகவும் காணப்படுகிறது.

இந்தியாவில் ஏதேனும் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் அங்கு கச்சத்தீவு ஒரு பிரதான பேசுபொருளாக காணப்படும்.இந்திய அரசியல்வாதிகளில் ஒருசிலர் தமது வாக்கு வங்கிக்காக கச்சத்தீவு பற்றி பேசுவார்கள். அதனூடாகவேனும் தமது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது.இந்த தீவை கைப்பற்ற போவதாக இந்திய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் விடுக்கவில்லை.

கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. கச்சத்தீவின் அடையாளத்தை இரு நாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *