இந்தியா

வெற்றிவேல் என கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி! ; என்ன பேசினார்?

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் வெற்றிவேல் வீரவேல் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்  (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன் உட்பட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.

உரையை தொடங்கும் முன் பிரதமர் மோடி, வெற்றிவேல் என கூறினார், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரரை தலை வணங்குகிறேன் என கூறியதுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரையும் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டை போதை மாஃபியா கும்பல்களின் இடமாக திமுக மாற்றிவிட்டது, தேசிய ஜனநாயக ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு உறுதி செய்யப்படும்.

எங்கள் கூட்டணியை மக்கள் நம்புகிறார்கள், திமுக மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது, அரசுப்பணி, ஒப்பந்தங்கள், மணல் திருட்டு, டாஸ்மாக் மோசடி என மோசடி செய்வதில் அமைச்சர்களிடையே போட்டி நிலவுகிறது.

பிரதமர் மந்திரி திட்டத்தில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி இன்னும் கள ஆய்வு செய்யாததால் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன.

எங்கள் கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *