உலகம்

ஈரானின் 09 கடற்படைக் கப்பல்களை வீழ்த்தியது அமெரிக்கா ; ட்ரம்பின் அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஒன்பது கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அழிக்கப்பட்ட கப்பல்களில் சில அளவில் பெரியவை மற்றும் இராணுவ ரீதியாக மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானிய கடற்படையின் தலைமை அலுவலகத்தை அமெரிக்க இராணுவம் பெருமளவில் அழித்துவிட்டதாகவும், ஈரானின் எஞ்சிய கடற்படைக் கப்பல்களையும் தேடி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

விரைவில் அவையும் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *