உலகம்

ஈரான் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டமை உறுதியானது

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தனர்.

அத்துடன் உயிரிழந்த அலி கமேனியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது.

எனினும் அதனை ஈரான் பாதுகாப்பு மற்றும் வௌிவிவகார அமைச்சு மறுத்திருந்தது.

இந்நிலையில், அயதுல்லா அலி கமேனி உயிரிழந்தமையை தற்போது ஈரான் அரச ஊடகம் உறுதிப்படுத்தி செய்தி வௌியிட்டுள்ளது.

முன்னதாக அவரது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் அறிவித்தது.

இதேவேளை ஈரானில் 40 நாட்கள் பொதுத் துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 7 நாட்களுக்கு அங்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் 40 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் 6 சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *