இந்தியா

கொல்கத்தாவில் நிலநடுக்கம் – அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

இந்தியாவின் கொல்கத்தாவில் இன்று மதியம் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து குலுங்கியதால் பொதுமக்கள் கடுமையாக அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் டாக்கிக்கு தென்கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில், 9.8 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, பங்களாதேஷில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தியா – பங்களாதேஷ் எல்லையாக மேற்கு வங்க மாநிலம் அமைந்துள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டு இருக்கலாம் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *