இந்தியா

தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்!

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் பண்பை கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தி.மு.க.வை வழி நடத்துகிறார் முதல்வர்.

மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் உள்ளனர்.

எனக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டாயமும் இல்லை. நானே சுயமாக சிந்தித்து முடிவு எடுத்து தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

கடந்த காலத்தைப்பற்றி கவலையில்லை. இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.

ஒரு தொண்டனாகவே தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன். கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.

தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன். தளபதி எடுக்கும் முடிவுக்கு இனி நான் முழுமையாக கட்டுப்படுவேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார் இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *