கவிதைகள்

கருவுடை திருவும் பெரு உருவாகும்!…. கவிதை… ஜெயராமசர்மா

வளரும் பயிரை முளையில் தெரியும்
வளரும் பருவம் கவனந் தேவை
இளமை என்பது வரமே ஆகும்
உரத்தை இட்டால் உறுதி நிச்சம்

கருவில் திருவை உடையா ரென்று
கவனம் கொண்டிடத் தவறவே வேண்டாம்
கவனம் கொண்டுமே காத்துமே வந்தால்
புவனம் போற்றிட கரு திருவடையும்

எரிவிளக் காயினும் தூண்டுகோல் வேணும்
கருதிரு வாயினும் காட்டுவார் வேணும்
வளர்பயி ராயினும் உரமிடல் வேணும்
உரமிடு நிலையே உயர்வினைக் காட்டும்

வளர் பயிரிடையே களை உருவாகும்
களை உருவானால் களைந்திடல் வேணும்
களை களைந்தாலே பயிர் விளைவாகும்
களைந்திட செயலே கருவினை வளர்க்கும்

பயிரினை வளர்க்க உரமதை இட்டால்
உரமதை உறுஞ்சிட களைகளும் முளைக்கும்
களைகளாய் வாழ்வில் வருவதைக் களைந்தால்
கருவுடை திருவும் பெரு உருவாகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *