பலதும் பத்தும்

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல்; ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை

இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது.

இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, நாளை 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் தரித்து நிற்கும்.

கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகக் கட்டத்தில் மற்றும் கடல் பயணக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

சுமார் 54 மீற்றர் நீளமுடைய இந்த பாய்மரக் கப்பல், சுமார் 500 மெட்ரிக் தொன் இடப்பெயர்ச்சித் திறனைக் கொண்டுள்ளது. 20 பாய்மரங்கள் மற்றும் 10,000 சதுர அடிக்கும் அதிகமான பாய்மரப் பரப்பையும், 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுள்ள கயிறு அமைப்புகளையும் கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, திருகோணமலையில் மூன்று அதிகாரிகளும் 25 இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளும் கடல் பயணப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *