உலகம்

வெனிசுலாவில் புதிய மன்னிப்புச் சட்டத்தில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை

வெனிசுலாவில் புதிய பொது மன்னிப்புச் சட்டம் அமலுக்கு வந்த 4 நாள்களில் 3,200-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்கள் மட்டுமின்றி, வீட்டுக்காவல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளின்கீழ் வைக்கப்பட்டிருந்தவா்களும் இச்சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய வெனிசுலா நாடாளுமன்ற சிறப்புக் குழுத் தலைவா் ஜாா்ஜ் அா்ரியாசா, பொது மன்னிப்புக் கோரி இதுவரை 4,203 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் முதல்கட்டமாக 3,052 பேருக்கு முழு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

கூடுதலாக, சிறையில் இருந்த 179 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்க படைகளால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தலைமையிலான புதிய அரசு, சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கப்போவதாக அறிவித்தது.

எனினும், கொலை, போதைப்பொருள் கடத்தல், ராணுவக் கிளா்ச்சி மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு இந்த பொது மன்னிப்புச் சட்டத்தில் இடமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ள.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *