பலதும் பத்தும்

கழுத்தில் உள்ள கருமை இரண்டே வாரத்தில் நீங்க சூப்பர் டிப்ஸ்

நம் எல்லோருக்குமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். அதனால் நம்முடைய முகத்தை பொலிவாக பராமரிக்க நிறைய ஃபேஸ் வாஷ், ஃபேஸ் மாஸ்களை பயன்படுத்துவோம், அப்படியாக, எந்த அளவுக்கு நாம் முகத்தை பராமரிக்கின்றோமோ அதே அளவு நாம் கழுத்து பகுதியையும் பராமரிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

காரணம் சிலருக்கு கழுத்து பகுதி மிகவும் கருமையான நிறத்தில் காணப்படும். இதற்கு உடல் பருமன் ஹார்மோன் மாற்றங்கள், இன்சுலின் எதிர்ப்பு என பல காரணங்கள் இருக்கிறது. இருப்பினும் இந்த கழுத்து பகுதி கருப்பாக இருப்பதால் நம்முடைய முகத்தின் அழகை கெடுக்கிறது.

அப்படியாக நம்முடைய கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை வீடுகளிலே எளிய முறைகள் நீக்குவதற்கான எளிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

கடலை மாவு மற்றும் எலுமிச்சை பழம் நம்முடைய கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை போக்குவதற்கு உதவியாக இருக்கிறது.

இதற்கு கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாற்றை ஒரு ஸ்பூன் எடுத்து பேஸ்ட் போல் தயார் செய்து கழுத்தில் தடவி பத்து நிமிடங்கள் பிறகு கழுவினால் ஒரு நல்ல மாற்றங்கள் இருக்கும். இதனை தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை செய்து வர மிகப் பெரிய அளவில் மாற்றத்தை பார்க்கலாம்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாறு

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை சிறிதளவு எடுத்து இரண்டையும் நன்றாக கலந்து அதனை கழுத்து பகுதியில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து பிறகு அதனை கழுவி வர அழுக்கு முற்றிலுமாக நீங்கிவிடும்.

உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது தயிர் சேர்த்து கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து பிறகு கழுவினால் நல்ல மாற்றத்தை காணலாம்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

தேங்காய் எண்ணெய் கழுத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழிவினாலும் கரும்புள்ளிகளை அவை நீக்குகிறது.

எலுமிச்சை சாறு

ஒரு பஞ்சில் எலுமிச்சை சாற்றை நினைத்து அதை கழுத்து பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல மாற்றத்தை காணலாம். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால் கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய கரும்புள்ளி விலகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *