உலகம்

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகளில் பாதுகாப்பு இல்லை – ஓட்டுநர்கள் கவலை

லண்டனில் இருசக்கர வண்டி பாதைகள் மற்றும் அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பெருமளவான முதலீடுகளை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரசாங்கம் செய்துள்ள போதிலும், இருசக்கர வண்டி பாதைகள் பாதுகாப்பற்றாக இருப்பதாக இருசக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் பெரும்பாலான பகுதிகளில் இருசக்கர வண்டி பாதைகள் உள்ளன. அதேபோன்று புதிய பாதைகளும் அவ்வபோது அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு வருகின்றன.

லண்டனில் உள்ள பெரும்பாலான இருசக்கர வண்டி பாதைகள் பாதுகாப்பற்காக இருப்பதாக இங்குள்ள இருசக்கர வண்டி ஓட்டுநகர்கள் transport for london இடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் லண்டன் நகரத்தில் இருசக்கர வண்டி ஓட்டிடுதலில் பாரிய அதிகரிப்புகள் உள்ள போதிலும், லண்டனில் 43 சதவீதமான இருசக்கர வண்டி ஓட்டுநர்கள், தமக்கான பாதை வசதிகள் முறையாக இல்லை என இவ்வாறு transport for london இடம் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிலேயே கடந்த காலத்தில் அதிகமான முறைப்பாடுகள் எழுந்திருந்தன. ஆனால், தற்போது, லண்டனிலும் இவ்வாறு குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக transport for london தெரிவித்துள்ளது.

குறிப்பாக லண்டனில் இருசக்கர வண்டி ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தாம் பயணிக்கும் பாதை பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

உள்ளூர் ஜனநாயக அறிக்கையிடல் சேவையின் தரவுகளின் பிரகாரம், லண்டனில் இருசக்கர வண்டி ஓட்டுநர்கள் தலைநகருக்கு வெளியே உள்ளவர்களை விட மிகவும் சிக்கலான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என தெரிவிக்கின்றன.

குறுகிய சாலைகளில் விபத்துகள் ஏற்படுவதாகவும், தெளிவற்ற சாலை அடையாளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போதைமை, இருசக்கர வண்டி ஓட்டும் பாதைகளை பாதசாரிகளும் பயன்படுத்தல் உள்ளிட்ட காரணிகளால் இவ்வாறு லண்டனில் இருசக்கர வண்டி பாதைகள் பாதுகாப்பற்றகாக இருப்பதாகவும், இருசக்கர வண்டி ஓட்டுநகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆண்டு நகரில் தினமும் 1.5 மில்லியன் இருசக்கர வண்டி பயணங்கள் இடம்பெற்றுள்ளதாக transport for london கூறியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *